வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலா செய்யப்போகும் தரமற்ற வேலை.. 10 கோடிக்கு மீண்டும் தலைவலியில் சிக்கப் போகும் சூர்யா

கடந்த ஒரு வாரமாக எந்த பக்கத்தை திருப்பினாலும் பாலா மற்றும் சூர்யாவின் சண்டைதான். வணங்கான் படத்தால் இருவருக்கும் தலைவலி தான். இந்த படத்தின் கதை பற்றிய தெளிவான முடிவு பாலாவிடம் இல்லை, ஏதோ சம்பந்தமே இல்லாமல் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சூர்யா விலகிவிட்டார்.

பாலாவும் அவர் பங்கிற்கு ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை நான் அதர்வாவை வைத்து எடுக்கப் போகிறேன் என்று அறிக்கை விட்டார். இதனைத் தொடர்ந்து இப்பொழுது பாலா செய்யப்போகும் ஒரு தரமற்ற வேலைதான் ஹாட் டாபிக்காக செல்கிறது.

Also Read : சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி

ஏற்கனவே வணங்கான் படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடிகள் வரை செலவாகியது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து வந்தது. பாலாவிற்கு முன் தொகையாக ஒரு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆக மொத்தம் இந்த படத்திற்கு 10 முதல் 15 கோடிகள் வரை வீரியம் செய்துள்ளனர்.

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இந்த படம் பாதியில் நின்றுவிட்டது. படம் இனிமேல் தொடராது என்று இரண்டு பக்கத்திலிருந்தும் அறிக்கை வெளி வந்துவிட்டது. இந்தப் படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது இந்த படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர்களுக்கு தவறாமல் பேட்டா மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது.

Also Read : பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

ஆனால் இந்த படத்தின் டிராப் அவுட் அறிக்கைகள் வெளிவந்த உடனேயே பேட்டா மட்டும் சாப்பாடு அனைத்தும் நிறுத்தப்பட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். எல்லோரும் மிகுந்த வருத்தத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு பிரிந்து சென்றனர்.

இப்பொழுது இந்த படத்தை பாலா, அதர்வாவை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மீண்டும் இந்த படத்தை தயாரிப்பதற்காக சூர்யாவின் 2d நிறுவனத்தையே அணுக பாலா திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பத்து கோடி வரை செலவழிந்து விட்டது இப்பொழுது சூர்யா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

Also Read : கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

Trending News