வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாலா, சூர்யா படத்தின் கதை இதுதானாம்.. பின்னணியில் உள்ள தரமான சம்பவம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதற்காக மதுரையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருக்கிறது.

அதுமட்டுமின்றி கோவாவிலும் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்தப் படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று சில சம்பவங்களை வைத்து சிலர் கூறுகின்றனர். அதாவது இப்படம் மீனவர்களை பற்றியும் அவர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை பற்றியும் காட்டப்பட இருக்கிறதாம்.

இதற்காக கடல் சார்ந்த பகுதிகளான கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக செட் போடும் முடிவில் படக்குழு இருக்கிறது. ஆகவே பாலாவின் திரைப்படத்தில் சில குறிப்பிட்ட மக்களின் வாழ்வில் நடக்கும் தரமான சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட இருக்கிறது.

அவரின் முந்தைய படங்களான தாரை தப்பட்டை, பரதேசி, நான் கடவுள் போன்ற திரைப்படங்களிலும் இப்படி நிஜ சம்பவங்களை மையப்படுத்தி பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கும். அதேபோன்றுதான் சூர்யா நடிக்கும் இந்தப் படத்திலும் மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

சமீபகாலமாக பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யாவுக்கு இப்படம் மற்றுமொரு சிறந்த படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது படத்தின் கதையும் இதுதான் என்ற செய்தி வெளியாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அதர்வா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைய இருக்கிறார்கள். விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Trending News