ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தெளிவான மனநிலையில் இல்லாத பாலா.. இதுவரை ஒரு நல்ல செய்தி கூட கிடைக்காதா வணங்கான்

சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் தொடங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது. கன்னியாகுமரியில் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் நடைபெற்றது.

அப்போது சூர்யா, பாலா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்றதாக தகவல் வெளியானது. அதன்பிறகு சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கியபாடு இல்லை. அதாவது பாலா வணங்கான் படத்தில் இன்னும் ஒரு தெளிவான முடிவில் இல்லையாம். ஏனென்றால் இந்தப் படத்தின் கதையை அவர் வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்கிறாராம்.

இதனால் தற்போது நிறைய குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்திலிருந்து சூர்யாவிற்கும், பாலாவிற்கும் பிரச்சனை இருந்ததற்கு காரணம் இதுதான் என கூறப்படுகிறது. இப்போது இந்த கதையை பற்றி ஒரு குழு திருவண்ணாமலையில் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கிறதாம்.

இதற்காக இயக்குனர்கள் சுதா கொங்கரா, ஏஎல் விஜய் போன்றவர்கள் இந்த படத்திற்காக அவ்வப்போது திருவண்ணாமலை வருவதும், போவதுமாய் இருக்கின்றனர். ஆனால் இன்னும் கதையை பாலா முழுவதுமாய் ரெடி பண்ணவே இல்லையாம்.

இதனால் இந்த படத்தின் பிரச்சனை தற்போது ஓயாது என படக்குழுவினர் கூறிவருகின்றனர். சூர்யா வணங்கான் படத்தை தொடர்ந்த வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைக்கு வணங்கான் படம் முடிவுக்கு வராது என பலரும் கூறிவருகின்றனர்.

Trending News