பல வருட இடைவேளைக்கு பின் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகள் அதிரடியாக நடந்து வருகிறது.
பொங்கலுக்கு வெளிவரும் பதினோரு படங்களுடன் கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் போன்ற படங்கள் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
பாலாவிற்கும் இந்த படம் கேரியரில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. விவாகரத்துக்கு பின் பாலா வெளியிடும் இந்த படத்தை பிதாமகன் போல் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாம்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஜாதியை பற்றி மிகத் தெளிவாகப் பேசி உள்ளார். ஜாதின்னு ஒன்னு இருந்தா தானே கருத்து சொல்றதுக்கு, ஜாதின்னு ஒன்னு இல்ல நானும் அதை வச்சு ஒரு படம் எடுத்து திரும்ப அந்த நெருப்பை கிளறி விட விரும்பல.
இப்படி ஜாதிக்கான ஒரு அர்த்தத்தை தெளிவாக சமுதாயத்தில் விதைக்க விரும்புகிறார் பாலா. இது யாருக்கான நெத்தியடி பதில் என்று பார்த்தால் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித்தை குறிக்கும்.
கிராமப்புறங்களில் ஜாதி இருப்பதை மறுக்க முடியாது ஆனாலும் அதை கிளறி விடுவது என்பது முட்டாள்தனமாக பார்க்கப்படுகிறது.எப்போதுமே இதை தள்ளி வைத்தே பார்க்க வேண்டும்.
வெற்றிமாறன் தன் குழந்தைகளுக்கு No Caste சர்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்று போராடி வந்துள்ளதும் பாலா இப்போது பேசியுள்ளதும் ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.