தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களின் ஆரம்ப வாழ்க்கையில் கை தூக்கிவிட்டாராக இருந்தவர் இயக்குனர் பாலா. மேலும் இவருடைய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.
மேலும் சில நடிகர்களுக்கு நடுவில் மார்க்கெட் இழந்து விட்டாலும் மீண்டும் அவர்களின் படங்களை இயக்கிய அந்த நடிகர்களுக்கு வாழ்வு தந்தவர் பாலா. நடிப்பு தெரியாத நடிகர்களிடமும் எப்படி வேலை வாங்குவது என்பது பாலாவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
பாலா இயக்கத்தில் சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற நடிகர்கள் சினிமாவில் முத்திரை பதிக்க பாலாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பாலா கலந்து கொண்டார். அதில் எந்த இயக்குனரும் செய்யாத விஷயத்தை அந்த நடிகர்களை வைத்து நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள், மேலும் நடிப்பு அவ்வளவு தான் என்று இருந்த நடிகர்களுக்கு கைதூக்கி மேலே கொண்டு வந்துள்ளீர்கள் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என சங்கீதா கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த பாலா, என்ன பெத்தவங்களே என்ன வெறுத்தாங்க, ஏனென்றால் எந்த மனுஷன்கிட்டயும் இல்லாத கெட்ட பழக்கங்கள் என்கிட்ட இருந்தது. இதனால் நான் ஒரு அனாதையாக இருப்பதாக உணர்ந்தேன். அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடினமாக உழைத்தேன்.
இதனால் யாரும் இல்லாதவங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும், அதனால்தான் எல்லாராலும் கைவிடப்பட்டவர்களை நான் கை தூக்கிவிடுகிறேன் என்று பாலா கூறியிருந்தார். மேலும் குடிப்பழக்கத்தை சுத்தமாக விட்டு விட்டேன், புகைப்பிடிப்பது மட்டும் உள்ளது அதையும் சிறிது நாட்களில் விட்டுவிடுவேன் என அந்த பேட்டியில் பாலா கூறியிருந்தார்.