வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விடாமல் சுற்றி வந்த விஜய் டிவி பிரபலம்.. கொடூர முகத்தை காட்டி கலங்கடித்த பாலா

Director Bala: இயக்குனர் பாலா எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பது திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அறிவார்கள். தன் மனதில் நினைத்த காட்சி வர வேண்டும் என்பதற்காக நடிகர்களை சக்கையாக பிழியும் இவர் பல தரமான படைப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

அதனாலேயே இவர் செய்யும் டார்ச்சர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு நடிக்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். அப்படி தான் இவரால் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகிய நடிகர்கள் பிரபலமடைந்தார்கள். இந்நிலையில் இவரை சுற்றி சுற்றி வந்து டார்ச்சர் செய்த விஜய் டிவி பிரபலம் ஒருவரை பாலா கலங்கடித்த விஷயம் வைரலாகி வருகிறது.

Also read: வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாடும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தவர் தான் அனந்த் வைத்தியநாதன். அதன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். அது மட்டும் இன்றி பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யாவின் தந்தையாக இவர் வருவார்.

பொதுவாக எல்லாருக்குமே பாலாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். அப்படித்தான் அனந்த் வைத்தியநாதனும் பாலா படத்தில் நடிக்க போகிறோம் என்று ரொம்பவும் உற்சாகத்தில் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து தன்னுடைய கேரக்டர் என்ன என்பதையும் அவர் இயக்குனரிடம் கேட்டிருக்கிறார்.

Also read: பாலாவை மிஞ்சிய சைக்கோ இயக்குனர் இவர்தான்.. செவுளில் விட்ட அறை, வாழை மட்டையில் வாங்கிய அடி

பாலா அதற்கு சரியாக பதில் அளிக்காத நிலையில் அனந்த் வைத்தியநாதன் மீண்டும் மீண்டும் கேட்டு அவரை சுற்றி சுற்றி வந்தாராம். இதனால் கடுப்பான பாலா அவரை மாவாட்ட சொல்லி இருக்கிறார். இப்படி ஐந்து நாட்கள் வரை அவர் படப்பிடிப்பு தளத்தில் மாவட்டியபடியே இருந்திருக்கிறார். இவ்வாறாக பாலா படிப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் மூர்க்கத்தனமாக தான் நடந்து கொள்வாராம்.

இன்னும் சொல்லப்போனால் இவரை சைக்கோ இயக்குனர் என்று கூட கூறுவது உண்டு. அந்த வகையில் இவரை ஹீரோ உட்பட யாரும் எதிர்த்து பேசக்கூடாது. இதனால் டாப் நடிகர்கள் கூட இவரிடம் என்ன கேரக்டர் என்று விரிவாக கேட்டுக் கொள்ள மாட்டார்கள். அப்படியிருக்கும் போது அனந்த் வைத்தியநாதன் ஆர்வக்கோளாறில் செய்த ஒரு விஷயம் அவரை மாவாட்ட வைத்து விட்டது.

Also read: எதிர்க்க திராணி இல்ல, 18 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த செந்தில் பாலாஜி.. குமுறிய விஜய் டிவி பிரபலம்

Trending News