வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவின் அதிரடியால் நிலைகுலைந்து போன பாலா.. ரிலீஸுக்கு முன்பே கலெக்ஷனை அள்ளும் வணங்கான்

சூர்யா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் அவர் பல மாதங்களாக நடித்துக் கொண்டிருந்த வணங்கான் திரைப்படம் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

எப்போதோ சூட்டிங் ஆரம்பித்த இந்த திரைப்படம் சில பல தடங்கல்களின் காரணமாக இன்னும் முடியாமல் இருக்கிறது. மேலும் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் கதை சம்பந்தமாக பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் இந்த தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம். பொறுத்து பொறுத்து பார்த்த சூர்யா தற்போது அதிரடியாக ஒரு வேலையை செய்திருக்கிறார்.

Also read : விக்ரம், சூர்யாவுக்கு போட்டியாக கெட்டப் மாற்றும் கில்லாடி நடிகர்.. ஓவர் ரிஸ்க் எடுத்ததால் கதறி அழுத அம்மா

அதாவது ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையை பாலா சூர்யாவிடம் சொல்லும்போது மிகவும் சுமாராக தான் இருந்திருக்கிறது. அதனால் அவர் இன்னும் கொஞ்சம் கதையை டெவலப் செய்யுமாறு பாலாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் பாலா எப்போதும் அவர் நினைப்பதை மட்டும்தான் செய்வார். மற்றவர்கள் பேச்சை கருத்தில் கொள்ள மாட்டார். அதனால் சூர்யாவின் பேச்சையும் அப்படியே டீலில் விட்டிருக்கிறார்.

அதனால் சூர்யா படத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டு வேறு படத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார். ஆனால் பாலா வழக்கம் போல இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மாத கணக்கில் இழுத்தது சூர்யாவை இன்னும் கோபப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே காட்சியை பல நாட்கள் எடுத்து அனைவரின் பொறுமையையும் பாலா சோதித்து இருக்கிறார்.

Also read : தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

இப்படி பல பிரச்சனைகள் அங்கு நடந்து கொண்டிருக்க சூர்யா இப்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். மேலும் வணங்கான் படத்தின் தற்போதைய நிலை என்ன என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் தயாரிப்பாளரான சூர்யா பாலாவை தன் வழிக்கு கொண்டு வருவதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

ஏற்கனவே பாலா தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து, பிரிவு என்று ஏகப்பட்ட பிரச்சனையில் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய படம் தியேட்டரில் வெளியாகாமல் இருப்பது அவருடைய கெரியருக்கே ஆபத்தாக கூட முடியலாம். தேவையில்லாமல் சூர்யாவை சீண்டியதால் தான் அவருக்கு இப்படி ஒரு நிலை என்று சூர்யாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read : பல பிரச்சனைகளை சந்தித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. இரண்டாம் பாகத்தை எடுக்கத் துணிந்த சூர்யா

Trending News