தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்களை எடுத்தவர் கே பாலச்சந்தர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு உண்டு.
இவர் அறிமுகம் செய்த கமல்,ரஜினி என பலர் தற்போது புகழின் உச்சத்தில் உள்ளனர். இந்த இரு நடிகர்களையும் வளர்த்து விட்டவர் பாலசந்தர்தான். இவர்களுக்கு பாலச்சந்தர் மீது எப்பொழுதும் ஒரு பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு.
இந்நிலையில் பாலச்சந்தர் முன்பு ஒரு பேட்டியில் நாகேஷ் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தின் கிளைமேக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார். நடிகர் நாகேஷ் தன்னுடன் நடிக்கும் முன்னணி நடிகர்களின் நடிப்பையும் தூக்கி சாப்பிட கூடியவர். இவருடைய கால்ஷீட் வாங்கிய பிறகுதான் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஹீரோவை முடிவு செய்வார்கள்.
அப்படி நாகேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் சர்வர் சுந்தரம். இப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். இப்படம் ஒரு ஹோட்டல் பணியாளரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் நாகேஷ் நடிப்பு, நடனம் என அனைத்தும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
சர்வர் சுந்தரம் படத்தில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கும் நாகேஷ் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் நடிகராக மாறினார். அப்போது பிசியாக நடிகராக உள்ள நாகேஷ் தனது தாயை இழக்க நேரிடுகிறது. இதனால் மீண்டும் சர்வர் வேலைக்கு சேர்கிறார் நாகேஷ். பணியாளராக இருந்த மனநிம்மதியை வேறு எங்கும் உணர்ந்ததில்லை என நாகேஷ் கூறுகிறார்.
இந்நிலையில் பாலச்சந்தர் சர்வர் சுந்தரம் படத்தில் கிளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிஉள்ளார். இப்படத்தின் கதையை கே பாலச்சந்தர் தான் எழுதி இருந்தார். இந்நிலையில் நான் இந்தப் படத்தை வேறு மாறி கையாண்டு இருப்பேன். அதுமட்டுமல்லாமல் கிளைமாக்ஸை மாற்றி இருப்பேன் என்று கூறியிருந்தார்.