சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அதிகளவில் சம்பளம் வாங்கும் 6 இசையமைப்பாளர்கள்.. இவங்கதான் டாப் என அன்றே கணித்த பாலச்சந்தர்

சினிமாவில் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு அந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு படத்தின் வெற்றியானது ஒரு சில சமயங்களில் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் மூலமும் தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் இவர்தான் டாப் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பார் என்று அன்றே கணித்துள்ளார் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படியாக கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் 6 இசையமைப்பாளர்களை இங்கு காணலாம்.

சந்தோஷ் நாராயணன்: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் திரை உலகிற்கு பிரபலமானார். இதனை அடுத்து பீட்சா, சூது கவ்வும், குக்கூ ஆகிய  திரைப்படங்களுக்கு தரமான இசையை கொடுத்துள்ளார். அதிலும் இதுவரை 30க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன் பல ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 2.5 கோடி சம்பளம் வாங்கி இவர் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: காணாமல் போன 4 இசையமைப்பாளர்கள்.. ட்ரண்டை மாற்றியும் பலன் இல்லை

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. தனது மென்மையான இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல்  இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.  அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 3 கோடி சம்பளம் வாங்கி இவர் 5-வது இடத்தில் உள்ளார்.

தமன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பின் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். அதிலும் இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில், விஜய்யுடன் முதன் முதலில் இசையமைப்பாளர் தமன் கூட்டணி அமைத்துள்ளார்.அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 5 கோடி  சம்பளம் வாங்கி இவர் 4-வது இடத்தில் உள்ளார்.

Also Read: 26 வருடங்களில் அஜித்தை தூக்கி விட்ட யுவனின் ஏழு படங்கள்.. அனிருத்துக்கு இப்பவும் டஃப் கொடுக்கும் மங்காத்தா

அனிருத்: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை அடுத்து டேவிட் படத்தில்“கனவே கனவே” பாடல் மற்றும் எதிர் நீச்சல் படத்தில் பின்னணி இசை என மாஸ் காட்டி புகழின் உச்சியை தொட்டார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில வருடங்களிலேயே தனது இசையின் மூலம் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 6 கோடி சம்பளம் வாங்கி இவர் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஏஆர் ரகுமான்: தமிழ் சினிமாவில் இசை புயல் என அழைக்கப்படுபவர் தான்  இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்திற்கு, இசையமைத்ததன் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதிலும் தனது முதல் படத்திலேயே மனதை வருடும் இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளார். அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 10 கோடி சம்பளம் வாங்கி இவர் 2-வது இடத்தில் உள்ளார்.

எம் எம் கீரவாணி: 1990 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தரின் அழகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் கீரவாணி. அதுமட்டுமல்லாமல் பாலச்சந்தர் இயக்கிய ஏகப்பட்ட படங்களுக்கு ஆஸ்தான இயக்குனராக இருந்துள்ளார். முடி சூடா மன்னனாக வலம் வரும் இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதிலும் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடலுக்காக ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளார். அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் 15 கோடி சம்பளம் வாங்கி இவர் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: யுவன்-தனுஷ் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. குத்தாட்டம் போட வைத்த ரவுடி பேபி

- Advertisement -spot_img

Trending News