வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலச்சந்தரின் மறக்க முடியாத 5 படங்கள்.. ரஜினியை புது பரிமாணத்தில் காட்டிய படம்

Director Balachander: தன் திறமையை கொண்டு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராய் வலம் வந்தவர் கே பாலச்சந்தர். மனித உறவு முறைகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துள்ள படங்களை தந்து வெற்றி கண்டவர்.

பல எண்ணற்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் 1930 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பிறந்தார். பல சாதனைகள், வெற்றிகள் பெற்ற இவர் 2014 ஆம் ஆண்டு திரை உலகத்தை விட்டு பிரிந்தார். இவரின் கருத்துள்ள கதை கொண்ட 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: அப்போ இருந்த சீரியலுக்கும், இப்போ இருக்க சீரியல்களுக்கும் உள்ள 5 வித்தியாசங்கள்.. படுக்கையறை காட்சிகளில் சினிமாவையே மிஞ்சும் சீன்கள்

எதிர்நீச்சல்: 1968ல் வெளிவந்த இப்படத்தில் நாகேஷ், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அனாதையாய் வறுமையில் வாழும் நாகேஷின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். இக்கதாபாத்திரத்திற்கு ஏற்ப நாகேஷின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

அபூர்வராகங்கள்: 1975ல் வெளிவந்த இப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் கமல் மற்றும் ரஜினி நடிப்பில் மாபெரும் வெற்றியை கண்டது. இப்படத்தில் ஸ்ரீவித்யாவின் குடும்ப சூழலை உணர்த்தும் கதையம்சம் கொண்டு மக்களின் பேராதரவை பெற்றது.

Also Read: பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

புது புது அர்த்தங்கள்: 1989ல் வெளிவந்த இப்படத்தில் ரகுமான், கீதா, சௌகார் ஜானகி, ஜனகராஜ், ஜெயசித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சிறந்த பாடகனாய் ரகுமானின் நடிப்பு தத்ரூபமாக பேசப்பட்டிருக்கும். மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீதாவின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

சிந்து பைரவி: 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சுகாசினி, சிவக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கர்நாடக இசையை மேம்படுத்தி இவர்கள் இருவர் இடையே ஏற்படும் சவால் பின்பு காதலாக மலர்வது போல் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக இளையராஜா- பாலச்சந்தர் கூட்டணியில் உருவான ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

தில்லு முல்லு: ரஜினியின் மாறுபட்ட பரிமாணத்தில் நகைச்சுவை நிறைந்த படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி தந்தது. அதிலும் சந்திரன், இந்திரன் என இரு கேரக்டரில் ரஜினி தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். மேலும் தேங்காய் சீனிவாசனின் எதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும். அவ்வாறு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மாறுபட்ட கதை அம்சம் கொண்டு வெற்றி கண்ட படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Trending News