நந்தமுறி பாலகிருஷ்ணா ஜோசியத்தில் ஊறிப்போன ஒரு ஹீரோ. இவரின் வலதுகரமாக ஒரு பழம் தின்னு கொட்டை போட்ட ஜோதிடர் ஒருவர் இருக்கிறார். பாலையா எந்த செயல் செய்தாலும், அந்த ஜோதிடரை மீறி எந்த ஒரு அணுவும் அசையாதாம்.
பாலகிருஷ்ணா இன்று இந்த நிற உடை தான் அணிய வேண்டும். சரியாக இத்தனை மணிக்கு வண்டியில் அமர்ந்து, அங்கே அந்த டைம் வண்டியிலிருந்து இறங்க வேண்டும் என்றெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தான் ஜோசியத்தின் வழியில் நடப்பாராம். அவருக்கு இந்த கலர் பிடிக்காது என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் அந்த கலர் அணியக் கூடாதாம்.
யாராவது பாலையாவிற்கு ராசி இல்லாத கலரில் உடை அணிந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை கூப்பிட்டு அடித்து விடுவாராம். இப்படி பல அட்டூழியங்கள் செய்து வந்துள்ளார் பாலகிருஷ்ணா. இப்படி எதற்கெடுத்தாலும் ஜோதிடர் சொல்லும் படி தான் பாலையா காலங்கள் கடந்து வருகிறது.
கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் என்றால் பாலையா தான்.பாலகிருஷ்ணா மற்றும் அஞ்சலி சேர்ந்து நடித்த படம் “கேங்ஸாப் கோதாவரி”. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாலையா அஞ்சலியை தள்ளி விட்டது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியது.
அதன் பின் பாலையா, அஞ்சலிடம் இந்த பிரச்சனையில் பாசிட்டிவாக, எல்லா பக்கமும் பேசும்படி கூறிவிட்டார். உடனே அஞ்சலி ட்விட்டரில் பாலகிருஷ்ணாவை பற்றி புகழ் பாடி பிரச்சனைக்கு முடிவு வைத்துள்ளார். ஆனால் பாலையா இப்பொழுதுதான் இந்த மாதிரி நடந்து கொள்கிறார்.
விஜயகாந்தை ஓவர் டேக் செய்த காரசார ஹீரோ
ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் பசியாற்றியது போல், பாலையா வீட்டிலும் 24 மணி நேரமும் அணையாத அடுப்பு, ஏழை எளிய மக்களின் பசியை போக்கியதாம். பல நல்ல விஷயங்களையும், உதவிகளையும் மக்களுக்காக செய்துள்ளார். இதனாலே அவருக்கு ஆந்திரா பக்கம் செம மாஸ். இப்பொழுது தான் சமூக வலைதளங்களில் அவர் பெயர் மோசமாக அடிபட்டு வருகிறது
- பாலையாவே ஓவர் டேக் பண்ணிய ஸ்டைலிஷ் ஹீரோ
- போதையில் அஞ்சலியிடம் மட்டமாக நடந்து கொண்ட பாலைய்யா
- விஜயகாந்துக்கு உதவிய வெள்ளிவிழா நடிகர்