Baalaiyah: சர்ச்சைகளுக்கு பெரிய அளவில் பேர் போனவர் தான் தெலுங்கு நடிகர் பாலையா. இவருடைய படங்களை ரசிப்பவர்களின் ரசலின் மீது சந்தேகப்படும் அளவுக்கு தான் இவருடைய நடிப்பு இருக்கும். சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்னும் தெலுங்கு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பாலையா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பலரது முன்னிலையில் நடிகை அஞ்சலி இடம் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தில் விஷ்வாக் கதாநாயகனாக நடிக்க அஞ்சலி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோ என்று கொடிக் கட்டி பறந்த நடிகை இவர். ஒரு சில சர்ச்சைகளால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் மீண்டும் வரும்பொழுது அவருக்கு மார்க்கெட் இல்லை. இதனால் கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
அஞ்சலி கைவசம் இருக்கும் படங்கள்
பூச்சாண்டி
ஈகை
ஏழு கடல் ஏழு மலை
கரிகாலன்
கேம் சேஞ்சர் (தெலுங்கு)
கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் பிரிவியூ விழாவில் சிறப்பு விருந்தினராக வாழ ஐயா கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பட குழுவினருடன் பாலையா இருந்தார். எல்லோருடைய முகமும் தெரிய வேண்டும் என்பதற்காக நடிகை அஞ்சலியை கொஞ்சம் பின்னால் நகர்ந்து நிற்க சைகை காட்டினார்.
வைரல் வீடியோவால் மானம் போச்சு
அதையும் தாண்டி திடீரென அஞ்சலியின் அருகில் வந்த பாலையா அவரை கையைப்பிடித்து தர தரவென இரண்டு அடி பின்னுக்கு தள்ளினார். இதனால் நிலை தடுமாறு கீழே விழப்போன அஞ்சலி ஒரு வழியாக கீழே விழாமல் தற்காத்துக் கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் இதை தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சிரித்து மதிப்பினார். பாலையாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பாலையாவின் இடத்தில் ஏதாவது ஒரு ரசிகர் இப்படி பண்ணி இருந்தால் அஞ்சலி சும்மா விட்டு இருப்பாரா? பட வாய்ப்புகளுக்காக ஏன் இப்படி எல்லாம் சகித்துக் கொண்டு இருக்க வேண்டும் என அஞ்சலிக்கு எதிராகவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எவ்வளவு அடிபட்டாலும் அசராத அஞ்சலி
- 38 வயதாகியும் அஞ்சலிக்கு நடக்காத திருமணம்
- நடுரோட்டில் அவரோட படுக்க சொன்னாங்க
- 50-வது படம், பல பேரிடம் கைமாறிய ஸ்கிரிப்ட்