ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

62 வயதில் இதெல்லாம் ஓவரா இல்லையா.. சிகரெட் சர்ச்சை, முகம் சுளிக்க வைத்த பாலகிருஷ்ணா

தெலுங்கு திரை உலகில் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் பாலகிருஷ்ணா நடிப்பில் வீரசிம்மா ரெட்டி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

பொதுவாக பாலகிருஷ்ணா திரைப்படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் இப்போது புதிதாக ஒரு சர்ச்சையை சந்தித்துள்ளது. அதாவது தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரில் பாலகிருஷ்ணா சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு பாடல் காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதில் சர்ச்சையை கிளப்பும் படியாக என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.

Also read: பாடி ஷேமிங், அதிரடியாக 18 கிலோ உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி.. தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

ஆனால் அதில் தான் விவகாரமே இருக்கிறது. அதாவது பாலகிருஷ்ணா அந்தப் பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து இன்னும் சில நடிகைகளுடன் ஆட்டம் போடுகிறார். அதில் ஒரு காட்சியில் அவர் தன் சிகரெட்டை ஒரு நடிகையின் நெஞ்சில் தூக்கி போட்டு பிடிப்பது போன்று இருக்கிறது. அது ஸ்ருதிஹாசனா என்ற ஒரு கேள்வியும் இப்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

ஆனால் அந்த நடிகை இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்திருந்தவராம். அவரும் அந்த பாடலில் இணைந்து ஆடி இருக்கிறார். எப்படி இருந்தாலும் மூத்த நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவுக்கு இப்போது 62 வயது ஆகிறது. அப்படி இருக்கும்போது அவர் இந்த வயதில் இது போன்ற காட்சிகளில் நடிக்கலாமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Also read: அடுத்தடுத்த பிரேக் அப்,வெளிநாட்டிலேயே டெண்ட் போட்ட ஸ்ருதிஹாசன்.. சத்தம் இல்லாமல் நடக்கும் ட்ரீட்மென்ட்

மேலும் சிகரெட் என்றாலே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். விதவிதமாக சிகரட்டை தூக்கி போட்டு பிடிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. இப்படி சிகரெட் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரஜினியே இப்போது சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டார். ஏனென்றால் இது தன்னை ரோல் மாடலாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் தான்.

அப்படி இருக்கும்போது பாலகிருஷ்ணா இப்படிப்பட்ட காட்சியில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகைகளின் வயிற்றில் பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது போன்ற காலம் போய் இப்போது நெஞ்சில் சிகரெட் போட்டு பிடிக்கும் அளவுக்கு சினிமா மாறிவிட்டதா என்ற கருத்தும் எழ தவறவில்லை. அந்த வகையில் வீரசிம்மா ரெட்டி ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் இந்த காட்சி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Also read: வாய்ப்பு வரும்போது வரட்டும் என தெனாவட்டு காட்டும் 5 ஹீரோயின்ஸ்.. ஸ்ருதிஹாசன் லிஸ்டில் சேர்ந்த நடிகைகள்

Trending News