சினிமாவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் துல்லியமாக, அழகாக காட்டுவது ஒரு ஒளிப்பதிவாளரின் வேலை. ஹீரோ, ஹீரோயின் அழகாக தெரிவதற்கும் இவர்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். அப்படி படங்களில் நாம் பார்க்கும் காட்சிகளை இயற்கையின் போக்கிலேயே அற்புதமாக வடிவமைத்து நமக்கு கொடுத்தவர் பாலுமகேந்திரா.
திரையுலகம் நமக்கு கொடுத்த ஒரு அற்புதமான கலைஞன் பாலு மகேந்திரா என்றால் அதற்கு மாற்று கருத்து இல்லை. இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல் டைரக்டர், ரைட்டர் என்பது போன்ற பல திறமைகளைக் கொண்டவர். இதுவரை இவருடைய ஒளிப்பதிவை அடிக்க ஆளே கிடையாது.
பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்பதுதான் இவருடைய முழுப் பெயர். சினிமாவில் இன்று வரை இவருடைய பெயர் நிலைத்து நிற்கிறது. ஒளிப்பதிவாளராக சாதிக்க வேண்டும் என்று சினிமாவுக்குள் நுழையும் பல இளைஞர்களுக்கும் இவர்தான் ரோல் மாடல்.
இதற்கு முக்கிய காரணம் இவருடைய அந்த அர்ப்பணிப்பு தான். ஒரு படத்தை எடுக்க இவர் ஒப்புக் கொண்டால் அதற்கான முழு உழைப்பையும் கொடுப்பார். உதாரணமாக ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் ஓரிடத்தில் நடக்கிறது என்றால், இவர் அந்த இடத்திற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே சென்று விடுவாராம்.
அப்படி செல்லும் அவர் அங்கு இருக்கும் கிளைமேட், வெயில் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றை தெரிந்து கொண்டு எந்த இடத்தில் எப்போ, எப்படி கேமராவை வைத்தால் நன்றாக காட்சிகள் வரும் என்று சோதித்து பார்த்துவிட்டு தான் திரும்புவாராம்.
மறுநாள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப காட்சிகளை அழகாக படம் பிடித்து விடுவாராம். காலையில் அவுட்டோர் ஷூட்டிங் அப்புறம் களைப்படைந்து விட்டாள் இன்டோர் ஷூட்டிங் என்று மாறி மாறி எடுத்து அசத்தி விடுவாராம். தங்களை அழகாக காண்பிப்பதால் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இவரை மிகவும் பிடிக்குமாம்.
பல கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படங்களை தான் இன்று நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் நாம் பார்த்து ரசித்த பல இயற்கை காட்சிகளை எந்த வித கிராபிக்ஸ் இல்லாமல் அப்படியே நம் கண்முன் காட்டி அசத்திய இவர் ஒரு உன்னத கலைஞன்.