புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஷேக் ஹசீனா ராஜினாமா, சுற்றி வளைக்க போகும் அண்டை நாடுகள்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து

Bangladesh crisis: வங்கதேசத்தில் நடந்த கிளர்ச்சி எல்லோருக்குமே தெரியும். அரசு வேலைகளில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு எதிர்த்து அந்த நாட்டின் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இன்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டதட்ட 1996 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இருந்தாலும் அந்த நாட்டில் இருப்பது ஆபத்து என உணர்ந்து தன்னுடைய சகோதரியுடன் நாட்டை விட்டு சென்றிருக்கிறார்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாக பல ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு விட்டன. மேலும் இந்திய நாடு ஒரு நிலையான அண்டை நாட்டை விரும்புகிறது, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியைத்தான் இந்தியா விரும்புகிறது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

வங்கதேசத்து கிளர்ச்சியும், ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவும் இன்று காலை நமக்கு சாதாரண விஷயமாக தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த கிளர்ச்சி இந்தியாவை பாதிக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா முழுக்க முழுக்க இந்தியாவிற்கு பெரிய ஆபத்தை உண்டாக்க இருக்கிறது.

இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து

இந்திய நாட்டின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நமக்கு நல்ல உறவு இல்லை. நம்மை சுற்றி இருக்கும் அண்டை நாடுகளில் இப்போதைக்கு நம்முடன் நெருக்கமாக இருந்தது வங்கதேசம் மட்டும்தான்.

ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடந்தாலும், இடைக்கால அரசை கொண்டு வருவதாக ராணுவ தளபதி அறிவித்திருக்கிறார். அந்த இடைக்கால அரசு கண்டிப்பாக எதிர்க்கட்சியாக இருக்க தான் வாய்ப்பா அதிகம்.

வங்கதேசத்தின் எதிர் கட்சி முழுக்க முழுக்க முஸ்லிம் அரசியலை பேசக் கூடியது. அந்த நாட்டில் நடந்த கிளர்ச்சிக்கு கூட பாகிஸ்தான் மற்றும் சீனா தான் காரணம் என உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இப்போது சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் வங்கதேசமும் இணைந்து விட்டால் இந்தியாவுக்கு அண்டை நாட்டு ஆதரவு என்பது இல்லாமலேயே போய்விடும்.

வங்கதேசத்தில் இப்படி ஒரு கிளர்ச்சி ஏற்பட போவதை இந்தியா கணித்திருக்க வேண்டும். அப்படி முன்பே இந்தியா கணித்திருந்தால் அந்த பிரச்சனையே சுமுகமாக தலையிட்டு இருக்க வேண்டும். கிட்டத்தட்ட வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி சென்று வந்தது எல்லோருக்குமே தெரியும்.

அப்போது ஷேக் ஹசீனாவிடம் இது பற்றி பேசி இருக்கலாம். எங்கேயோ இருக்கும் ரஷ்யா- உக்கிரன் போர் பற்றி எல்லாம் மோடி பேசி பஞ்சாயத்து பண்ணுகிறார். ஆனால் நமக்கு ஒரே ஆதரவாக இருந்த அண்டை நாட்டு கிளர்ச்சியை கண்டு கொள்ளாமல் விட்டது இப்போது நம் நாட்டின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகிவிட்டது.

Trending News