சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பேங்க் ராபரி மட்டும் துணிவு படத்தின் கதை இல்ல.. தரமான பிரச்சனையை துணிந்து கையில் எடுத்த வினோத்

அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் துணிவு படம் ஒரு மிகப்பெரிய பேங்க் ராபரி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது ஒரு சமூக பிரச்சனையை வினோத் இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார்.

Also Read : டைட்டிலுக்காக மெனக்கெட்ட வினோத்.. துணிவு வந்த கதை இதுதான்

சமீபகாலமாக பலரும் சந்தித்து வரும் பிரச்சனை வங்கிகடன். அதுவும் கோவிட் தொற்று காரணமாக பலர் தங்களது வேலையை இழந்த சூழ்நிலையில் அவர்கள் வாங்கிய வங்கி கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மல்டி நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.

லோன் வாங்கிய கஸ்டமரை எல்லோர் முன்னிலைகளும் அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது என பல மட்டமான வேலைகளை செய்து வருகின்றனர். இதை தாங்க முடியாத சிலர் வேறு வழி இன்றி தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இதற்கு காரணம் வங்கி ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்வது தான்.

Also Read : உதயநிதியால் பெரும் சிக்கலை சந்தித்த அஜித், விஜய்.. வேறு வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

இந்த காட்சிகளை தத்ரூபமாக எடுத்துள்ளாராம் வினோத். மேலும் இதுபோன்று வாடிக்காளர்களை மோசமாக நடத்தும் பேங்கை குறி வைத்து ராபரி நடைபெற உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரை போய் சேர்கிறது என்பது படம் வெளியான பிறகு தெரியவரும்.

மேலும் வினோத் இயக்கத்தில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு விஷயத்தை துணிந்து கையில் எடுத்து துணிவு படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Also Read : அஜித் கவனத்திற்கு வராத பெரிய மோதல்.. ஹெச் வினோத் போடும் மோசமான சண்டை

- Advertisement -spot_img

Trending News