வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு எதிராக கிளம்பும் பிரச்சனை.. நீங்க பிழைக்க நாங்க பலிகடா ஆகணுமா?

.பொங்கலன்று வெளியான துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே இந்த மாதிரி மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கிய படம் மற்றும் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே அஜித் அரசியல் சம்பந்தமான கருத்துக்கள் தேவை இல்லாத விஷயங்களில் தலையிட மாட்டார்.

அது மாதிரியே இந்த படமும் அமையும் என எதிர்பார்த்த அஜித்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. படத்தில் பேங்க் சம்பந்தமான மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களை பேங்க் எப்படி ஏமாற்றுகிறது என்பதை அடிப்படையாக வைத்துள்ளனர். இதனால் இந்த படம் அனைவராலும்பாராட்டப்படுகிறது.

Also Read : விஜய் படத்தை மண்ணை கவ்வ வைத்த இரண்டு ஹீரோக்கள்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது வம்சி சார்

ஆனால் இது அஜித்திற்கும் இயக்குனர் வினோத்திற்கும் எதிராக பல பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இந்த படத்தை பார்த்த பேங்க் சம்பந்தப்பட்ட பொருளாதார வல்லுனர்கள் இது தவறு என கூறி வருகின்றனர். அவர்கள் தனித்தனியாக யூ டியூப் வாயிலாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதிரி கதையில் அஜித் எப்படி நடித்தார் எச்.வினோத் எப்படி பேங்க் ஏமாற்றுகிறார்கள் என கதையை உருவாக்கினார் என்று தெரியவில்லை. இந்த மாதிரி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மக்களின் பணத்தை பேங்க் ஏமாற்றுகிறது என அஜித் சொல்லும்போது இது சாதாரண மக்கள் வரை சென்றடைந்து விட்டது. நடுத்தர மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் பணத்தை போட்டு அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

Also Read : சைலண்டாக வசூல் வேட்டையாடிய துணிவு.. உலகம் முழுவதும் 7 நாட்களில் செய்த கலெக்ஷன்

இந்த படத்தை பார்த்த பிறகு அஜித்தே சொல்லிவிட்டார் என்று மியூச்சுவல் பண்டில் பணத்தைப் போடயோசிக்கிறார்கள் மற்றும் போட்ட பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார்கள் இது தமிழ்நாட்டில் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் அஜித்தும் அந்த படத்தின் இயக்குனரும் தான். இதனால் அவர்களுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என வரை கோபப்பட்டு பேசி வருகின்றனர்.

அஜித் வாங்கும் சம்பளத்தில் பாதி பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பங்குச் சந்தையில் மட்டுமே இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளார். இப்படி இருக்க இவர் சம்பாதித்துக் கொண்டே எப்படி மக்களை குழப்பமடைய செய்ய முயற்சி செய்தார் என கேட்டு வருகின்றனர். ஒரு படத்தை எடுப்பதற்கு முன்னால் மிகவும் ஆராய்ந்து இந்த கருத்தை சொன்னால் மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசித்து படத்தை எடுக்க வேண்டும் என அறிவுரை கூறி இருக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Also Read : ஐஸ்வர்யா ராயுடன் அந்த மாதிரி வேண்டவே வேண்டாம்.. அஜித்துக்காக மொத்தமாக கதையவே மாற்றும் விக்கி

Trending News