சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அஜித்துடன் யுவராஜ் சிங் மனைவி ஆடிய பார் டான்ஸ்.. ஏகே-வை பலிவாங்க போட்ட காதல் நாடகம்

Ajith and yuvaraj singh wife : அஜித் நடித்த எத்தனையோ படங்கள் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ஆரம்ப கட்டத்தில் அஜித் நடித்த படங்கள் அனைத்தும் பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோன்றும். அதன்பின் நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் ரஜினியின் பழைய படமான பில்லா படத்தை விஷ்ணுவர்தன் ரீமேக் பண்ணி 2007 ஆம் ஆண்டு கொடுத்தார்.

இதில் அஜித் கிரிமினல் வேலையை பார்க்கும் க்ரைம் தலைவராக நடித்தார். இப்படத்தில் அஜித் தனக்கு கீழே வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் துரோகம் செய்த காரணத்தினால் அவரை கொலை செய்து விடுவார். இதைத் தெரிந்து கொண்ட ராஜேஷின் காதலி அஜித்தை பழி வாங்குவதற்கு முயற்சி எடுப்பார். அப்பொழுது அந்த கூட்டத்திற்குள் சேர வேண்டும் என்பதற்காக அஜித்தை காதலிப்பதாக ஒரு பிளான் போட்டிருப்பார்.

Also read: விஜய், அஜித்துக்கு முதலமைச்சராகவும் யோகம் உண்டா.? ஜோசியரை நம்பும் சினிமா

இப்படி அந்த நடிகை பிளான் பண்ணியபடி அந்த கூட்டத்திற்குள் சேர்ந்து அஜித்துடன் நெருங்கி ஆட்டம் போட்டு காரியத்தை சாதிக்க நினைப்பார். அந்த நடிகை வேறு யாருமில்லை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவி ஹேசல் கீச். இவர் ஆரம்பத்தில் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார். அதன் பின் தமிழில் கிடைத்த வாய்ப்பு தான் பில்லா படம். அடுத்து தெலுங்கு, ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்தார்.

அத்துடன் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் அதில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அதன் பின் நடித்த ஒரு சில படங்களும் பெருசாக இவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. பிறகு 2016 ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தி வருகிறார்.

Also read: அஜித் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே ரஜினி தான்.. 14 வருடங்களுக்கு முன் தூபம் போட்ட தலைவர்

Trending News