மனிதனை காதல் படுத்தும்பாடு.. கல்லுக்குள் ஈரம்.. பாரதிராஜாவுக்குள் இருக்கும் காதல்

என் இனிய தமிழ் மக்களே.. என ஒற்றை வாக்கியத்தை சொன்னாலே போதும், மொத்த கோலிவுட்டும் தமிழ்நாடும் பாரதிராஜாவின் பேர் சொல்லும். தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்த பல படங்களையும், பல நாயகர்களையும், நாயகிகளையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.

சொல்லப்போனால், அந்த காலத்தில் இவர் இல்லை என்றால் கோலிவுட்டே இல்லை என்று சொல்லலாம். மக்களை காதலில் விழ வைத்தார் பாரதிராஜா. இவரும் இளையராஜாவும் சேர்ந்தால் போதும், இந்த படம் பட்டிதொட்டி எங்கும் பரவி மக்கள் மனதை ஆட்கொள்ளும்.

இப்படிப்பட்ட பாரதிராஜா நடிப்பு என்று வரும்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர். அவரை பார்த்தாலே நடிகைகள் அஞ்சுவார்கள். ஆனால் இவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரம் போல காதல் பூ பூத்தது. அந்த காதல் இவரை படுத்தியபாடு இருக்கே..

பாரதிராஜாவும் தீராத காதலும்

சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் இந்த விஷயத்தை கூறி இருக்கிறார். பள்ளி காலம் முதலே நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் சில காரணங்களால் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை பார்த்தேன்.

அப்போது நான் என்னுடைய சகோதரிகளோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அவளை பின்னால் இருந்து பார்க்கும்போதே அது அவர் தான் எனக் கண்டுபிடித்துவிட்டேன். உடனே நான் காரை நிறுத்தச் சொன்னேன். இதனால், என்னுடைய சகோதரிகள் எல்லாம் எனக்கு என்னமோ ஆகிவிட்டது என பயந்தார்கள்.

ஆனால் எனக்கோ நான் பார்த்த பெண், நான் காதலித்தவளாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே அவர் நின்றிருந்த பூக்கடைக்கு சென்றேன். அங்கு பார்த்தால் நான் காதலித்த அதே பெண்தான். அவரின் தலைமுடி எல்லாம் வெள்ளை ஆகி இருந்தது. ஆனாலும் எனக்கு மனதிற்குள் அவரை பார்த்த உடன் ஒரு பூரிப்பு ஏற்பட்டது.

எனக்கு அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கம். ஆனால், அவரே என்னை பார்த்து பேசினார். என்னை பார்க்க என் வீட்டிற்கெல்லாம் வந்துள்ளாராம். ஆனால், நான் அங்கு இல்லை என வீட்டிலிருப்பவர்கள் கூறியதால் திரும்பி சென்றுவிட்டேன் என்றார்.

அவரின் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அந்த சமயத்தில் அவர் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை கொடுத்து என்னுடைய பேத்தியின் கல்யாணம் வந்துவிடு என்று சொன்னார். பல வருடங்களுக்குப் பின் அவரின் குரலைக் கேட்கும் போது எனக்குள் நடந்த அத்தனையும் கனவுபோல் மாறியது. சிரிக்கவா அல்லது பேசவா என்று சொல்லத் தெரியாத மனநிலையில் இருந்தேன். என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்க்கவே அவ்வ்ளவு க்யூட்டாக இருந்தது. இப்படி ஒரு காதலா என்று ஆச்சரியமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. சேராத காதலின் வலியும் அழகும் வேறு எதிலும் இருக்க முடியாது.

Advertisement Amazon Prime Banner