நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் அமைந்துள்ள வித்தியாசமான திரைப்படம்தான் ‘பத்தா’.
வழக்கமான ரவுடிகள் கதைகளைப் போல் இல்லாமல், எண்பதுகளின் மெட்ராஸ் வாழ்வியலை அழகாக வெளிப்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு சூப்பர்.
அந்தக் காலகட்டத்தின் நினைவுகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
படத்தின் கதைக்களம் எண்பதுகளின் பின்னணியில் அமைந்துள்ளதால், OG தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தைக் காண ஆர்வத்துடன் உள்ளனர். சாய் அபியங்கரின் விறுவிறுப்பான பின்னணி இசையும், படத்தின் பாடல்களும் ட்ரெண்டாகி வருவது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
தியேட்டர்களை விட ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதோடு, இந்திய அளவில் நெட்ஃபிளிக்ஸ் டாப் 10 பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
சில கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களில் இப்படத்தைத் தவற விட்டுவிட்டோமே என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.




