புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பறவைகளில் ஒரு இன்ஜினியர்.. அற்புதங்கள் நிறைந்த தூக்கணாங்குருவியின் கூடு

Science: கால மாற்றத்தின் காரணமாக பல அற்புதமான விஷயங்களை நாம் நமக்கு தெரியாமலேயே இழந்து வருகிறோம். இன்னும் சில காலத்தில் மரங்கள், தண்ணீர் இவற்றையெல்லாம் மியூசியத்தில் தான் பார்க்க வேண்டுமோ என்ற அளவுக்கு அச்சம் ஏற்படுகிறது.

அதில் மக்களோடு மக்களாக இருந்த தூக்கணாங்குருவியும் இப்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. சிட்டுக்குருவி இனத்தை சேர்ந்த இப்பறவை கூடு கட்டும் அழகே தனி தான். அதில் பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன.

அதாவது இந்த கூட்டை ஆண் குருவி தான் கட்டும். தர்ப்பை புல்லை பயன்படுத்தி தான் இந்த கூட்டை தூக்கணாங்குருவி கட்டும். சில இலைகள், தேங்காய் நார்கள் கூட சேர்த்து வைத்து கட்டுவதுண்டு.

தூக்கணாங்குருவியின் திறமை

ஆனால் தர்ப்பை புல்லை ஏன் பயன்படுத்துகிறது என்றால் இதன் மேல் நீர்பட்டாலும் மக்கி போகாது. இரண்டு அறைகள் இருக்கும் படி இந்த கூடு இருக்கும். ஒரு அறை ஆண் பெண் குருவிகளுக்கானது. மற்றொரு அறை குட்டி குருவிகளுக்கு.

பொதுவாக நீர் நிலைகளின் அருகில் தான் தூக்கணாங்குருவி தன் கூட்டை அமைக்கும். அதேபோல் கூடுகளின் நுழைவு வாயில் காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் இருப்பது போல் அமைய பெற்றிருக்கும்.

ஏனென்றால் கூட்டிற்குள் இருக்கும் முட்டைகள் அப்போதுதான் கீழே விழாமல் இருக்குமாம். மேலும் தென்னை மற்றும் பனை மரங்களில் தான் இந்த கூடு அமைக்கப்படும். ஏனென்றால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் எதுவும் தீண்டி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தூக்கணாங்குருவி களிமண்ணை அந்தக் கூட்டில் வைத்து அதனுள் மின்மினி பூச்சியை வைத்திருக்கும். அந்த பூச்சி அவைகளுக்கு வெளிச்சத்தை கொடுக்கும்.

இவ்வாறு ஆண் குருவி கூடு கட்டிய பிறகு பெண் குருவி அதை பார்வையிடும். பிறகுதான் இரண்டு குருவிகளும் அதில் வசிக்க ஆரம்பிக்கும். இப்படி பறவைகளில் ஒரு இன்ஜினியராக நம்மை வியக்க வைக்கிறது இந்த தூக்கணாங்குருவி.

ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் சார்ந்த செய்திகள்

- Advertisement -

Trending News