செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் விமர்சனம் கூறிய பயில்வான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு போன்ற இரண்டு படங்களும் இன்று ரிலீஸ் ஆகி இருப்பதால் அதிகாலை 4 மணி முதல் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதுகிறது. இதனால் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் வரிசையாக சோசியல் மீடியாவில் விமர்சனங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் நடிகரும் திரைப்பட விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் ஒரே வார்த்தையில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு ரிவ்யூ கொடுத்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட நடிகர்களின் படங்கள் வெளி வந்தாலும் அதற்கு பட்டு பட்டு என்று தன்னுடைய விமர்சனத்தை கொடுத்து பலருடைய கோபத்தை சம்பாதித்துக் கொள்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.

Also Read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

அப்படி இருக்கும் நிலையில் இன்று அதிகாலையில் பயில்வான் ரங்கநாதன் தியேட்டரில் துணிவு படத்தை பார்த்து விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது செய்தியாளர்கள், அஜித்தின் துணிவு திரைப்படம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, ‘சண்ட’ என்று மறுபடி மறுபடியும் ஒரே வார்த்தையை மட்டுமே சொல்லி விமர்சித்திருக்கிறார்.

இதன் பிறகு வாரிசு படமும் வெளியாகிறதே அது எப்படி இருக்கிறது? என்றும் கேட்டிருக்கின்றனர். வாரிசு முன்னாடி வந்து துணிவை தூக்கி அடித்து விடும். ஏனென்றால் அதில் கதை இருந்தது என்று துணிவு படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

Also Read: பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஒன் மேன் ஷோ.. வாரிசு அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ

இதைக் கேட்ட தல ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர். மேலும் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் இரண்டு ஜோனரில் உருவாகி இருக்கிறது. துணிவு இளசுகள் விரும்பியவாறு அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உள்ளது. அதனால் இளைஞர்களின் மத்தியில் துணிவுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கும்.

அதேபோன்று வாரிசு குடும்பக் கதைகளத்தை கொண்டதால் பக்கா பேமிலி என்டர்டைமென்ட் ஷோவாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும். இப்படி இந்த இரண்டு படங்களிலும் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன் மேன் ஷோ காண்பித்திருப்பதால் நிச்சயம் அவர்களது ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also Read: துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்

இருப்பினும் சிலர் படத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் சென்றால் மட்டுமே அவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும். ஆனால் ரசிகர்களை பொறுத்தவரை அவர்களது நாயகன் படத்தில் இருப்பதால் நிச்சயம் பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

Trending News