புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கண்ணழகி நடிகையை விரட்டி விரட்டி காதலித்த ராஜமாதா புருஷன்.. குடும்பத்தில் குண்டு வைத்த பயில்வான்

Actor Bayilvan Ranganathan: பயில்வான் பேசினாலே அது பஞ்சாயத்து தான். சினிமா பிரபலங்களை பற்றிய ரகசிய தகவல்களை வெளியிடுவதில் இவர் கில்லாடி.

ஏற்கனவே பல நடிகைகளிடம் இதற்காக இவர் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். அதன்படி தற்போது இவர் ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் குடும்பத்தில் குட்டையை குழப்பும் வேலையை பார்த்துள்ளார்.

அதாவது ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி 80ஸ் ஹீரோயினை விரட்டி விரட்டி காதலித்ததாக இவர் தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது கண்ணழகி என புகழப்படும் பானுப்பிரியா தான்.

பயில்வான் வெளியிட்ட ரகசியம்

வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு தன் மகளுடன் மீண்டும் சென்னை திரும்பிய இவர் நடிப்பையும் தொடர்ந்தார்.

அந்த சமயத்தில் தான் வம்சி இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கேட்டிருக்கிறார். ஆனால் பானுப்பிரியா அதற்கு முடியாது என்று ஒரேடியாக மறுத்து விட்டாராம்.

அதன் பிறகு தான் அவர் ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்திருக்கிறார். இந்த தகவலை தற்போது பதில்வான் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

என்னதான் இது உண்மையாக இருந்தாலும் தற்போது இதெல்லாம் தேவையா? நல்லா இருக்கிற குடும்பத்தில் எதுக்கு குண்டு வைக்கிறீர்கள் என ரசிகர்கள் இதற்கு கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News