வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சுசித்ரா லீக் செய்த ஆடியோ.. எக்ஸ் புருஷன் சொன்னா, நாக்குல நரம்பு இல்லாம பேசுவீங்களா!

திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையின் ரகசியங்களைப் பற்றி அவ்வப்போது பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவிடம் வசமாக வாங்கிகட்டி உள்ளார்.

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் உள்ளவர் சுசித்ரா இவர் துணை நடிகர் கார்த்திக்கை விவாகரத்து செய்துகொண்ட நிலையில் தற்போது ரேடியோவில் பணியாற்றி வருகிறார். இதனிடையே பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை பார்த்து கொந்தளித்துள்ளார் சுசித்ரா .

இதனிடையே பயில்வான் ரங்கநாதனை போனில் தொடர்பு கொண்ட சுசித்ரா, என்னை எப்படி நீங்கள் முழு பைத்தியம் என்றும் ஹோட்டலில் மதுபோதையில் கத்தி கூச்சலிட்டபோது கார்த்திக் காப்பாற்றினார் உள்ளிட்டவற்றை நீங்கள் பேசியுள்ளீர்கள். இதையெல்லாம் நீங்கள் பார்த்த ஆதாரம் உள்ளதா என சரமாரியாக பயில்வனிடம் கேள்வி கேட்டார்.

மேலும் உங்கள் பிள்ளைகளை பற்றி இப்படி யாராவது அவதூறாக பேசினால் நீங்கள் இப்படிதான் இருப்பீர்களா, நான் உங்களுக்கு அப்படி என்ன செய்தேன், நாக்கில் நரம்பு இல்லாமல் இப்படி பேசி உள்ளீர்கள், கண்டிப்பாக உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளேன் என சுசித்ரா காட்டமாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த , பயில்வான் ரங்கநாதன் இதையெல்லாம் உங்கள் முன்னாள் கணவர் கார்த்திக் தான் உங்களைப் பற்றி பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார் என்றும் நான் பிள்ளை குட்டிக்காரன் நான் தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு சுசித்ரா, உங்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் கார்த்திக்கின் பெயரை சொல்வீர்களா என வினவியுள்ளார்.

உடனே பயில்வான் ஆம் சொல்வேன் என பதிலளித்ததை தொடர்ந்து நன்றி என தெரிவித்து போனை கட் செய்துள்ளார் சுசித்ரா. இதனிடையே தற்போது சுசித்ரா பயில்வானுடன் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News