புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இதுக்கு இல்லையா ஒரு எண்டு.. ஆர்த்தியால் ஜெயம் ரவி, தனுஷுக்கு சண்டை, புதிய புரளியை கிளப்பும் விபூதி மண்டை

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். “என்னை வீட்டை விட்டே துரத்தி விட்டார். என் உடமைகளை மீட்டு கொடுங்கள்” என்று ஜெயம் ரவி புகார் கொடுத்ததை தொடர்ந்து அடுத்த பூகம்பம் வெடித்தது..

ஆனால் போலீசார், ஆர்த்தி பங்களாவிற்கு சென்று விசாரித்தபோது, “இது என்ன கூத்தாக இருக்கிறது. வீட்டின் பெயரை கூட நான் இன்னும் மாற்றவில்லை. அவரை நான் வீட்டை விட்டு அனுப்பினேனா? அவர் என் கணவர். அவருக்கு இங்கு வர எல்லா உரிமையும் இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்” என்று சொல்லி இருக்கிறார். இதெல்லாத்தையும் பார்க்கும் நமக்கு தான் குழப்பமாக உள்ளது. யார் மீது தவறு என்றே சொல்ல முடியவில்லை.

எது எப்படியோ, இவர்கள் டிவோர்ஸை கன்டென்ட் ஆக பயன்படுத்தி பலர் சம்பாதிக்கின்றனர். அந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது பயில்வான் ரங்கநாதன். “ஜெயம் ரவி இந்த விவாகரத்து விஷயத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு மறுக்கிறார். எனது மகன்களின் நல்வாழ்க்கை ரொம்ப முக்கியம். அதனால் ஆர்த்தியை பற்றி சொல்ல விரும்பவில்லை என்று ஜெயம் ரவி கூறுகிறார்.”

“ஒரு வருடத்துக்கு முன்பு ஜெயம் ரவிக்கும், தனுஷுக்கும் சண்டை ஏற்பட்டது. அதற்கு காரணம் தனுஷிடம் ஆர்த்தி நெருங்கி பேசிக்கொண்டிருந்ததுதான் என்று ஒரு கிசுகிசு இருந்தது. அதற்கு பிறகு ரவியும், ஆர்த்தியும் சமாதானம் ஆகிவிட்டார்கள். ஆனால் ரவியிடம் சொல்லாமலேயே ஆர்த்தி பப்க்கு போவது, குடிப்பது என அதிகமாகிவிட்டார். அதேபோல் ரவியிடம் சொல்லாமலேயேஅனுமதி இல்லாமலேயே பாங்காங், தாய்லாந்து கூட சென்றிருக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கிறது.”

இப்படியெல்லாம் பயில்வான் ரங்கநாதன் அவர் வாய்க்கு வந்த படி பேசி இருக்கிறார். இதுதான் இந்த விவாகரத்துக்கு ஆர்த்தி ஒத்துக்கொள்ளாததற்கு காரணம் என்று என்னிடம் கூறினார் என பயில்வான் தெரிவித்திருக்கிறார். நேர்ல பாத்த மாதிரி பேசுவதும், உருட்டுவதும் இவர்க்கு புதிதல்ல. தனிப்பட்ட விவகாரணத்தில் தலையிடுவதை இவர் எப்போது தான் நிறுத்துவாரோ.

மேலும் நெட்டிசன்கள்.. “யோவ் விபூதி மண்டை.. திருந்தவே மாட்டியா” என்று கேட்டு வருகின்றனர். மேலும், “யார் மீது எல்லாமோ கேஸ் போடுகிறீர்கள், முதலில் இவர் மீது கேஸ் போடுங்க பா” என்றும் சொல்லி வருகின்றனர்.

Trending News