சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சமயத்திற்கு சந்திரமுகியாக மாறும் பிக்பாஸ் பைனல் லிஸ்ட் போட்டியாளர்.. பக்காவாக ஒர்க்கவுடானா ஸ்டேட்டஜி!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. எனவே இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன் ஆகிய மூன்று பேரில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும்.

எனவே முதன்முதலாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சீசன்1 டைட்டில் வின்னர் ஆக பாலாஜி முருகதாஸ் வர அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதால் அல்டிமேட்டில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்த சரியான திட்டமிடுதலுக்குப் பிறகுகே இந்த நிகழ்ச்சியில் காலடி வைத்திருப்பார்கள்.

அதிலும் குறிப்பாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் நுழைந்த ரம்யா பாண்டியன், ஏற்கனவே தமது இடுப்பழகி காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை வசியம் செய்து வைத்திருக்கிறார். இருப்பினும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் தீராத புன்னகையுடனும் பிக்பாஸ் வீட்டில் வலம் வருவதுடன் மொக்கை ஜோக் அடித்து நேர்மை, நியாயம் என பேசிக் கொண்டிருப்பார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு வாக்குவாதம் மட்டும் வந்துவிட்டால் ரம்யா பாண்டியன் டெரர் மோடிக்கு மாறிவிடுவார். அதிலும் குறிப்பாக பாலாஜி முருகதாஸ் தாமரையுடனான வாக்குவாதம் என்றால் சந்திரமுகியாகவே மாறிவிடுகிறார். இதுதான் இவருடைய ஸ்டேட்டஜியாக வைத்துக்கொண்டு இறுதி வாரம் வரை வந்து விட்டார்.

அத்துடன் பிக்பாஸ் கொடுத்த பிசிகல் டாஸ்க்கை தன்னுடைய காலை உடைத்துக் கொண்டு கூட பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட ஆண் போட்டியாளர்களுக்கு சவால் நிறைந்த போட்டியாளராக ரம்யா பாண்டியன் இருந்ததனால் பிக் பாஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

ஆகையால் பிக் பாஸ் அல்டிமேட் சீசன்1 நிகழ்ச்சியில் முருகதாஸ் முதலிடத்தையும், ரம்யா பாண்டியன் இரண்டாமிடத்தையும் பெறப் போகின்றனர். எனவே அதனை இன்று நேரடியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News