செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாடி, போடி என அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கத்தி கலாட்டா செய்த ஆயிஷா, ரேங்கிங் டாஸ்கால் வெடித்த பிரச்னை

விஜய் டிவியின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று பிக்பாஸ். உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன் முதல் நாளிலிருந்தே சுவாரஸ்யமாக நடந்து வருகிறது.

மற்ற சீசன்களை கம்பேர் செய்யும் போது இந்த சீசனை பலதரப்பட்ட மக்களும் விரும்பி பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் டிக் டாக் புகழ் ஜி பி முத்து தான். கடந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் வெற்றி பெற்று பிக்பாஸ் ஆறாவது சீஸனின் முதல் வார தலைவராக முத்து தேர்வாகி இருக்கிறார்.

Also Read : கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

அது போல முதல் வார எலிமினேஷன் ப்ராஸஸ்க்கு நாமினேட் ஆகி இருப்பவர்கள் ஆயிஷா மற்றும் தனலட்சுமி. ஆயிஷா மற்றும் தனலட்சுமி ஆரம்பித்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் ஒரு எதிர்மறையான உணர்வையே கொடுத்து வருகிறார்கள். அதிலும் தனலட்சுமி வீட்டில் சண்டை போடாத ஆளே இல்லை.

ஆயிஷா ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இல்லை என்றே சொல்லலாம். கடந்த வாரம் முழுவதும் வீட்டில் டான்ஸ் மாரத்தான் நடைபெற்றது. போட்டியாளர்கள் இருவராக நடன போட்டியில் மோதிக்கொண்டனர். இது முடிந்து இன்று வீட்டில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Also Read : கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

இன்றைய ப்ரோமோவில் ஹவுஸ் மேட்டுகள் தங்களை தரவரிசை படுத்திகொண்டு நிற்கிறார்கள். இதில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. வழக்கம் போல அசீம் தன்னுடைய நாட்டாமை வேலையை ஆரம்பித்து விட்டார். தரவரிசையில் நிற்பவர்கள் பாதி பேருக்கு அங்கு நிற்க தகுதியே இல்லை என்று சொன்ன அசீம் நேரிடையாகவே ஆயிஷாவை தாக்கி பேசுகிறார்.

அதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா அசீமிடம் கத்தி சண்டையிடுகிறார். அசீம் ஆயிஷாவை இன்னும் கோபப்படுத்தும் விதமாக நீ வீட்டில் எப்பவும் தூங்கி கொண்டே தான் இருக்கிறாய் என்று சொல்வதோடு வாடி, போடி என்று ஒருமையில் பேசுகிறார். இதனால் ஆயிஷா இன்னும் கத்துகிறார். இந்த சண்டையின் முடிவு என்ன என எபிசொட் பார்க்கும் பொழுது தான் தெரியும்.

Also Read : நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News