Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

42 நாட்களுக்கு ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்.. லவ் ட்ராக் ஓட்டியதாலே லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி 

42 நாட்களுக்கு ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்.. லவ் ட்ராக் ஓட்டியதாலே லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷு வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

BB7 Aishu Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்  ஒரு போட்டியாளர் அதிரடியாக எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்த ஐஸு மக்கள் அளித்த குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவர் ஒரு நாளைக்கு மட்டும் 15 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆக மொத்தம் 42 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸு மொத்தமாக 6 லட்சத்து 30 ஆயிரத்தை வாரி சுருட்டிக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பி இருக்கிறார்.

இவர் நிக்சனுடன் லவ் ட்ராக் ஓட்டியதற்காகவே விஜய் டிவி கொஞ்சம் கூட தயங்காமல் லட்சங்களை வாரி இறைத்திருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் தனித்து விளையாடிய ஐஷு அடுத்தடுத்த நாட்களில் நிக்சா, நிக்சா.. என, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அவருடன் சேர்ந்து காதல் விளையாட்டு மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தார்.

ஐஷு பெரும்பாலும் சக போட்டியாளர்களுடன் அதிக நேரம் செலவிடாமல் நிக்சன் உடன் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சலடைந்த ரசிகர்கள் இவருக்கு குறைந்த ஒட்டுக்களை அளித்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்.

இதை அவரே கமல் முன்பு ஒத்துக் கொண்டார். ‘என்னுடைய ஒரு சில இமோஷனை இந்த வீட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று  சொல்லி தன்னுடைய தவறை உணர்ந்தார். 21 வயதாகும் ஐஷு  பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓரளவு பயன்படுத்திக்கொண்டார்.

அவர் மட்டும் நிக்சனுடன் காதல் ட்ராக்  ஓட்டிடாமல்  இருந்திருந்தால் அக்ஷயா போல் கேமராவில் தெரியாமல் ஓரம் கட்டப்பட்டிருப்பார். ஐஷுவுக்கு நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தாலும் அவரை பற்றி பேச வைத்து பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய இருப்பை இருப்பதை காட்டிவிட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.