செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அடுத்தடுத்து Bully Gang- ஐ காப்பாற்றி விடும் விஜய் டிவியின் கேவலமான வேலை.. காஜி நிக்சனுக்கு அடித்த லக்

BB7 Tamil: விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பாலும் மக்கள் கவனம் செலுத்தாமல் போவதற்கு அந்த சேனல் தான் முக்கிய காரணம். தேவையில்லாத ஆட்களுக்கு அதிக ஹைப் கொடுத்து நிகழ்ச்சியில் தொடர வைத்து விடுவார்கள். அதே நேரத்தில் மக்கள் அமோகமாக ஆதரிப்பவர்கள் எப்போதுமே அந்த நிகழ்ச்சியில் தோற்றுவிடுவார்கள். இத்தனைக்கும் மக்கள் முடிவே மகேசன் முடிவு என்பது போல் ஓட்டிங்கெல்லாம் அந்த சேனலில் பிரமாதமாகத் தான் இருக்கிறது.

மக்கள் ஓட்டு அளிப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று அந்த சேனலில் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது மக்களுக்கு பிடித்தவர்கள் எப்படி ஒரு நிகழ்ச்சியில் தோக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய சந்தேகம். அதே விளையாட்டை தான் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் செய்கிறது. கிட்டத்தட்ட இதை நம்பி பார்ப்பவர்கள் தான் ஏமாளிக்கும் ஏமாளி.

Also Read:மிக்ஜாம் புயல் பிக்பாஸிலும் எதிரொலி.. எலிமினேஷனை குறித்து ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர் நிக்சனுக்கு முதல் மூன்று வாரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த சில வாரங்களாகவே நிக்சனை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த வாரம் காஜி நிக்சன் தொக்காக நாமினேஷனில் சிக்கினார்.

விஜய் டிவி அடித்த அந்தர்பல்டி

நிக்சன் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறி விடுவார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் நம்பி இருந்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் பட்டை நாமம் போட்டிருக்கிறது விஜய் டிவி. அதாவது மழை வெள்ளம் காரணமாக தொலைதொடர்பு சாதனங்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இதை காரணம் வைத்து மக்களால் ஓட்டு போட முடியவில்லை, எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் டிவி அறிவித்திருக்கிறது.

இதனால் நிக்சன் இந்த வாரம் வெளியில் செல்ல வாய்ப்பு இல்லை. இனி வரும் வாரங்களில் விஜய் டிவி என்னவெல்லாம் செய்து நிக்சனை எலிமினேஷனுக்கு வரவிடாமல் தடுக்க போகிறது என்று தெரியவில்லை. பிக் பாஸ் செய்யும் இந்த சூதாட்டத்தின் மூலமாகவே நன்றாக தெரிகிறது நிக்சன் போட்டியில் கடைசி வரை விளையாடுவார் என்பது.

இப்படித்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சகுனி போல் விளையாடிக் கொண்டிருக்கும் மாயா இரண்டாவது வாரமே வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டியது. ஆனால் பவா செல்லதுரை தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக மாயா எலிமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார். அதே வேலையைத்தான் தற்போது விஜய் டிவி நிக்சன் விஷயத்திலும் செய்திருக்கிறது.

Also Read:அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

Trending News