திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரதீப்பை உள்ள கொண்டு வர சரியாக காய் நகர்த்தும் விசித்ரா.. மீண்டும் மீண்டும் சேர்ந்து அசிங்கப்படும் ஏஜென்ட் டீம்

BB7 Vichithra: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த 12 போட்டியாளர்கள் பிரதீப்பை வெளியே அனுப்ப வேண்டும் என்று சொல்லிய போது, நடிகை விசித்ரா அவரை எச்சரித்து விட்டு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி இருந்தார்.

பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து விசித்ராவுக்கும், ஏஜென்ட் கூட்டத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இன்று பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விசித்ரா ஐஷு மற்றும் நிக்சனை நாமினேட் செய்திருக்கிறார். இதற்காக அவர் சொல்லிய காரணம் தான் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

நிக்சன் கமலஹாசன் முன்னிலையில் பிரதீப் ஐஷுவை தவறாக பேசினார் என்று எதுவுமே சொல்லவில்லை. ரெட் கார்டு கொடுக்கலாமா என்று நிக்சனை கன்பஷன் ரூமில் அழைத்து கேட்டபோது தான் ஐஷுவை தவறாக பேசியதால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். பிரதீப் ஐஷுவை தவறாக பேசியிருந்த பட்சத்தில் ஏன் அந்த இடத்திலேயே நிக்சன் அவரை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.

Also Read:பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுக்க மாயாக்கு என்ன தகுதி இருக்கு.? 6 வருடங்களுக்கு முன்பே இருந்த தகாத உறவு

அதேபோல் ஐஷு, நான் ஆர்த்தெடக்ஸ் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன், இது போன்ற சம்பவம் நடப்பது என் வீட்டில் இருப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று ஓவர் அலட்டல் காட்டினார். பிரதீப் பேசியதை மட்டும் தான் ஐஷுவின் வீட்டில் பார்ப்பார்களா, நிக்சன் உடன் சேர்ந்து ஐஷு செய்யும் வேலைகளை எல்லாம் பார்க்க மாட்டார்களா என்று விசித்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அப்படியே பிரதீப் ஐஷு வை தவறாக பேசியிருந்தால் ஏன் அந்த இடத்திலேயே ஐஷு அவரை கேள்வி கேட்கவில்லை. பிரதீப் உண்மையாகவே தவறு செய்ததால் வெளியேற்றப்பட்டாரா, அல்லது கூட்டம் சேர்த்துக் கொண்டு இவர்கள் அவரை வெளியே அனுப்பினார்களா என்று தெரியவில்லை என்று விசித்ரா சொல்லி இருக்கிறார்.

ஐஷு மற்றும் நிக்சன் சேவ் செய்யப்பட்டால் பிரதீப் மீது தவறு இருக்கிறது, அவர் வெளியே சென்றது சரிதான் என ஒத்துக் கொள்கிறேன் என விசித்ரா கூறினார். அதே போல் ஐஷு அல்லது நிக்சன் இருவரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டால் கண்டிப்பாக கூட்டம் சேர்த்துக் கொண்டுதான் பிரதீப்பை வெளியே அனுப்பி இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும் என சொல்லி பிரதீப்பிற்கான நியாயத்தை மக்களிடமே கொடுத்துவிட்டார் விசித்ரா.

Also Read:பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. விஷப்பாட்டிலை களையெடுக்க வேண்டியதுதான், வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

Trending News