செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

பிக் பாஸ் சீசன் 6, சீசன் 7 யாரு பெஸ்ட் தெரியுமா ? அசல் கோளாறை மிஞ்சிய காஜி நிக்சன்

Nixen vs Asal kolaru: விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. எதுக்கு இந்த சீசனை ஆரம்பித்தோம் என சேனலே புலம்பும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி இப்போது போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் கமலஹாசன் கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் இந்த சீசனில் அவருடைய பெயர் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததிலிருந்து இந்த சீசன் அடி வாங்க தொடங்கியது. அதிலும் மாயா, பூர்ணிமா மற்றும் நிக்சனை வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள் வைக்க பிக் பாஸ் செய்யும் தந்திரமான வேலைகள் மக்களை ரொம்ப வெறுப்படைய செய்திருக்கிறது. அதிலும் கடந்த வாரம் எபிசோடுகளில் நிக்சனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கமல் மணி மற்றும் தினேஷிடம் பேசியது அவருடைய மொத்த பெயரையும் டேமேஜ் செய்து விட்டது.

Also Read:இனி என்னோட பாதை சிங்கப் பாதை.. வெறியோடு களமிறங்கும் பிக்பாஸ் வீட்டின் புது கேப்டன்

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சிலரை கடந்த சீசன் 7 போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள் பிக் பாஸ் வோட் பார்வையாளர்கள் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 6 இதில் GP முத்து, அசல், ஷிவின், அசீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரீன், மணிகண்டன், ரச்சிதா, ராம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, கதிரவன், ஏ.டி.கே, தனலட்சுமி, குயின்சி, நிவாஷினி, மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிக்சன் vs அசல் கோளாறு

இந்த நிகழ்ச்சியில் அதிகமாக கழுவி ஊற்றப்பட்ட போட்டியாளர் என்றால் அது நிக்சன் தான். இவரை அசல் கோளாறுடன் பார்வையாளர்கள் கம்பர் செய்து வருகிறார்கள். எப்போதுமே பெண்களை தொட்டுக் கொண்டு, உரசி கொண்டு இருப்பது தான் இவர்களின் வேலை. அதிலும் நிக்சனை ஒப்பிடும் பொழுது அசல் கோளாறு எவ்வளவோ பரவாயில்லை என பெயர் வாங்கி இருக்கிறார்.

இந்த சீசனில் அட இந்த போட்டியாளரை தயவு செய்து வெளியேற்றுங்கள் என்று மக்கள் கதறியது ஐஷுவை தான். பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் நிவாஷினியுடன் இவரை ஒப்பிடுகிறார்கள். ரவீனா உண்மையிலேயே கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான ஆள் தானா அல்லது நடிக்கிறாரா என்ற சந்தேகம் இன்றுவரை தெளிந்த பாடில்லை. அவருடன் சீசன் 6 போட்டியாளர் குயின்சியை கம்பேர் செய்கிறார்கள் பார்வையாளர்கள்.

அதேபோன்று சின்னத்திரை நடிகர் தினேஷை, கடந்த சீசன் போட்டியாளர் விக்ரமனுடனும், சாந்தி வில்லியம்சை நடிகை விசித்ரா உடனும், சின்னத்திரை நடிகை ஆயிஷாவை மாயாவுடனும், விஜே மகேஸ்வரியை பூர்ணிமாவுடனும், தனலட்சுமியை ஜோவிகா உடனும், மணிகண்டாவை மணிச்சந்திரா உடனும், ராமை விக்ரமனுடனும் ஒப்பீடு செய்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

Also Read:ஆண்டவரால கூட இந்த சீசனை காப்பாத்த முடியல.. 70 நாளாகியும் ஒரு ஆணியும் புடுங்காத பிக்பாஸ்

Trending News