வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் வீட்டை விட்டு 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறிய நிக்சன்.. மஜாவாக சுற்றிய மன்மதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

BB7 Tamil: பிக் பாஸ் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எவிக்சன் என்றால் அது நிக்சன் உடையது தான். 90 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிக்சன் நேற்று டபுள் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள்மன்மதனாக சுற்றி கொண்டிருந்த நிக்சனின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு வாரங்களிலேயே அவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. பிரதீப் ஆண்டனிக்கு அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் மக்களை அதிகம் கவர்ந்தவர் ஆக இருந்தார். அதிலும் பிரதீப் ஆன்டனியை எதிர்த்து சண்டை போட்ட வாரம் நிக்சன் லட்சக்கணக்கான ஓட்டுகளை பெற்று சேவ் ஆகி இருந்தார்.

யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் என்ற பழமொழிக்கு ஏற்ப நிக்சன் தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார். காதல் கன்டென்ட் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிக நாள் இருக்கலாம் என்ற மாயாவின் தவறுதலான தூண்டலின் பெயரில் ஐஷு உடன் பழக ஆரம்பத்தில் இருந்து நிக்சனின் ஆதரவு குறைய தொடங்கியது.

Also Read:உங்க 5 பேருக்கு தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல.. கேமராவில் சிக்கிய காஜி ஜோடிகள்

நிக்சன், ஐஷு உடன் பழகிய விதம் மிகப்பெரிய எதிர்ப்பை பெற்றது. இரண்டு பேரில் யாராவது ஒருவர் வெளியேறிய ஆக வேண்டுமென பார்வையாளர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள். அதை தொடர்ந்து ஐஷு எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற வாரம் நிக்சன் உண்மையாகவே நன்றாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் மாயா மற்றும் பூர்ணிமா வலையில் சிக்கியது தான் இன்று அவர் வெளியேறியதற்கு காரணம்.

நிக்சனின் சம்பள விவரம்

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் நிக்சன் பங்கேற்றதற்கான சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. நிக்சனுக்கு ஒரு நாளைக்கு 13,000 சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது நிக்சன் 90 நாட்களுக்கு மேல் வீட்டிற்குள் இருந்திருக்கிறார் கிட்டத்தட்ட 12 லட்சம் இவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் நிக்சன் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இவ்வளவு நாள் பிக் பாஸ் போட்டியில் இருந்த நிக்சன் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு ஒரு பாட்டு கூட பாடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also Read:நிக்சனைப் போல் விதியை மீறிய மணி.. கண்டுக்காமல் போன பிக்பாஸ், காரணம் இதுதான்

Trending News