வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் துரத்திய உடனே பட வாய்ப்பு பெற்ற வாயாடி பெத்த மகள்.. வினோதமான கூட்டணி

BB7 Contestant To Get A Film Opportunity: ரியாலிட்டி ஷோ என்றாலே அது பிக் பாஸ் தான் என்று ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதுதான். அதன் மூலம் பட வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.

அதற்கேற்றார் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் இப்போது சினிமாவில் டாப் நடிகர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் வத்திக்குச்சி வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். வெறும் 19 வயதே ஆன ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சி சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லலாம். தொடக்கத்தில் செம ஸ்ட்ராங்கான போட்டியாளராக விளையாடிக் கொண்டிருந்த ஜோவிகா, அதன் பின் மாயாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி ஏஜென்ட் ஆகவே மாறிவிட்டார்.

Also Read: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய 5 பேர்.. பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்ட பிளேபாய்

பட வாய்ப்பை பெற்ற ஜோவிகா

இதனால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் இவரை பிக் பாஸ் வெளியில் அனுப்பாமல் சீக்ரெட் ரூமில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழல் தான் ஜோவிகாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனுடன் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை ஜோவிகா பெற்றிருக்கிறார்.

பிக் பாஸ் துரத்தி அடித்தாலும் என்னுடைய மகளுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என ஒவ்வொரு ரிவ்யூ ஷோவிலும் காக்கா போல் கத்திக் கொண்டிருக்கும் வனிதாவின் ஆசை இப்போது நிறைவேறி விட்டது. ஆனால் இந்த கூட்டணி வினோதமான கூட்டணியாக இருக்குதே என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7ல் அதிகம் பேசப்பட்ட டாப் 5 பிரபலங்கள்.. வரலாற்றையே புரட்டி போட்ட கிளாமர் குயின்

Trending News