வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் வர்மாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்.. அப்போ ரெட் கார்டு கன்ஃபார்ம் தான் போல

BB 7 Red Card: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் இந்த வாரம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் யார் வெளியே போவார் என்பது தான் இந்த வாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த முறை ஆரம்பத்திலேயே கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். இரண்டு வீடுகள் அமைத்து சுவாரசியம் இல்லாதவர்களை அந்த வாரத்தின் தலைவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ரூல்ஸ் சொன்னதிலிருந்து மொத்த பிரச்சனையும் பற்றி கொண்டு விட்டது. ஆரம்பித்த 20 நாட்களிலும் சண்டை மற்றும் சச்சரவு தான் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை கடினமான டாஸ்க் எதுவுமே கொடுக்கப்படவில்லை என்று வெளியில் பேசப்பட்டது. அந்த குறையை தீர்த்து வைக்கும் வகையில் கடந்த வாரம் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆரம்பித்த போது இது ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய டாஸ்கில்லை என்று தான் தோன்றியது. ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் அதை ஒரு போர்க்களமாகவே மாற்றி விட்டார்கள்.

விஜய் வர்மா ஏற்கனவே முதல் வாரத்திலேயே தேவை இல்லாமல் பேசியதற்காக ஸ்ட்ரைக் வாங்கி இருந்தார். தற்போது நடந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் ரொம்பவும் கோபமாக நடந்து கொண்டதோடு உடலளவில் போட்டியாளர்களை தாக்கியது எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கமலஹாசன் எபிசோடில் கண்டிப்பாக அவர் இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடி மூன்றாவது ப்ரோமோவில் கமல் இதைப் பற்றி பேசியிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட கோபத்தை இதுபோன்று டாஸ்க்கில் காட்டக்கூடாது என சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு போட்டி எல்லையை மீறுகிறது என்று தெரிந்தால் உடனே அதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தும் இருக்கிறார். மேலும் விஜய் வர்மா செய்ததை பிரதிப் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் விதிகளின்படி உடல் அளவில் காயத்தை ஏற்படுத்தும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். இரண்டாவது சீசனில் இது போன்ற ஒரு டாஸ்க்கில் மகத், டானியை காயப்படுத்தி இருந்தார். அப்போது அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த சீசனில் விஜய் வர்மாக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோடில் இது உறுதியாக தெரிய வரும்.

Trending News