BB7 Tamil Promo: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7, 27 நாட்களை கடந்து இருக்கிறது. நேற்றைய எபிசோடில் ஒட்டுமொத்தமாக விஜே அர்ச்சனா, கானா பாலா, பிரவோ, தினேஷ், அன்ன பாரதி என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். முந்தைய சீசன் போல் இல்லாமல், இந்த சீசனில் பழைய போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக வந்திருப்பவர்களை கார்னர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
அடிச்சிக்கிட்டாலும் நமக்குள்ள முடிச்சுக்கலாம் புதுசா யாரும் உள்ளே வர வேண்டாம் என பழைய போட்டியாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள். முதல் நாள் சம்பிரதாயத்துக்காகவாது நன்றாக பேசுவோம் என்று இல்லாமல் நேற்றில் இருந்தே பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒட்டுமொத்த வைல்ட் கார்டு போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டின் பழைய போட்டியாளர்களை அழைத்து நேற்று வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தவர்களை நாம் சரியாக வரவேற்கவில்லை என அர்ச்சனா சொல்கிறார் என்றார். அதற்கு மாயா அதெல்லாம் நீங்க எதிர்பார்க்காதீங்கனு நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
உடனே அர்ச்சனா நீங்க கலாய்ப்பதற்க்கெல்லாம் நாங்க எல்லாம் அமைதியா போகணும்னு எதிர்பார்க்கிறீங்களா என கேக்க, மாயா நான் பேசியது அவமரியாதையா இருந்ததுனா மன்னிச்சுக்கோங்க என்று சொல்கிறார். வேண்டாதவங்களா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்றது தான் மரியாதை என்று சொல்ல, அதற்கு மாயா உடன் சேர்ந்து பழைய போட்டியாளர்கள் எல்லோருமே சிரிக்கிறார்கள்.
அர்ச்சனா அதற்கு நீங்க செய்வது எதுவுமே சரி இல்லை என்று சொல்லி அழுகிறார். அவரை தினேஷ் சமாதானப்படுத்துவது போல் அந்த ப்ரோமோ முடிகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாளே அர்ச்சனா தாக்கு பிடிக்க முடியாமல் அழுதது பார்வையாளர்களே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தவர்கள் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லை.
புதிதாக வந்த போட்டியாளர்களை கார்னர் செய்வது, அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விசித்ரா மூலம் டார்ச்சர் செய்ய நினைப்பது, எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு புதிய போட்டியாளர்களை நாமினேட் செய்வது என பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள் விதிகளை மீறிக் கொண்டே இருக்கிறார்கள். இது பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்கிறது.