வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தினேஷ் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது, இதுதான் வழி.. மாயா போட்டிருக்கும் சதி திட்டம்

Bigg Boss Season 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் பூர்ணிமா மற்றும் மாயா மீது தான் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கோவமும் இருக்கிறது. கமல் இந்த ஷோவவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆடியன்ஸ்கள் ஆதங்கப்படும் அளவிற்கு, அவர்கள் இருவரின் நடவடிக்கையும் இருக்கிறது. இந்த முறை மாயாவின் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

மற்ற போட்டியாளர்களை கண்டதையும் சொல்லி வாயை அடைக்கும் மாயா மற்றும் பூரணிமாவால் தினேஷை சமாளிக்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு தடவையும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற கோர்ட் ரூம் டாஸ்க்கில் தினேஷ் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருவருமே தோற்றுப் போய்விட்டார்கள்.

பூர்ணிமா, தினேஷை எதிர்த்து சண்டை போட தான் எப்போதுமே தயாராக இருக்கிறார். ஆனால் மாயா கூட்டத்திலேயே கொஞ்சம் கிரிமினல் புத்தி அதிகம் உள்ளவர் என்பதால் பக்காவாக பிளான் போட்டிருக்கிறார். நேற்று இரவு மாயா மற்றும் பூர்ணிமா தினேஷை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மாயா, தினேஷை பேசி ஜெயிக்க முடியாது என பூர்ணிமாவிடம் சொல்லுகிறார்.

Also Read:அட இந்த வாரமும் டபுள் எவிக்சனா!. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர், உடைய போகும் மாயா கூட்டணி

தினேஷ் எமோஷனலாக பிளாக் செய்ய வேண்டும் என்று மாயா, பூர்ணிமாவிடம் சொல்லுகிறார். அவரிடம் நெருங்கி பழகி, நமக்கு சப்போர்ட் செய்து அவர் சண்டை போடும் அளவிற்கு மாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார். அதற்கு அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் தினேஷின் மனைவி ரட்சிதா. இந்த பிளான் கண்டிப்பாக ஜெயிக்கும் என்றும் சொல்லுகிறார்.

தினேஷ் மற்றும் சின்னத்திரை நடிகை ரட்சிதா காதலித்து திருமணம் செய்திருந்தார்கள். தற்போது இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில், ரட்சிதா போன சீசனில் பங்கெடுத்துக் கொண்டார். மாயாவின் திட்டப்படி தினேஷிடம், ரட்சிதாவை பற்றி பேச வேண்டும், அப்போது அவருக்கு சப்போர்ட் செய்து ஆறுதல் சொல்ல வேண்டும் என பூர்ணிமாவிடம் சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் தினேஷை மற்றும் தான் மாயா மற்றும் பூர்ணிமாவால் சமாளிக்க முடியவில்லை. இதை நேற்றே இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். ஒரு ஆண் போட்டியாளரை எமோஷனலாக பேசி கவுக்க வேண்டும் என இருவரும் போட்ட பிளானால், பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கு மட்டும் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது.

Also Read:நாளுக்கு நாள் அதிகரிக்கும் அட்டூழியம்.. ஒரே பாத்ரூமுக்குள் மாயா, ஐஷு செய்த வேலை

Trending News