புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் சூனிய பொம்மை

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 75 நாட்களில் ரெட் கார்டு, ஸ்ட்ரைக் கார்டு, டபுள் எவிக்சன், மிட் வீக் எவிக்சன் என அத்தனையும் கடந்து வந்திருக்கிறது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வார நாட்களிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். கழுவுற மீனில் நழுவுற மீனாக சுற்றி கொண்டிருந்த கூல் சுரேஷ் வார இறுதி நாளில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு, நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதுவரை நடந்த நாமினேஷனில் ஆறு முதல் 11 போட்டியாளர்கள் வரை நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால்தான் சில நேரங்களில், மக்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை கூட என்னடா செய்வது என ஓட்டுப்போட்டு வீட்டிற்குள் வைத்திருந்தார்கள்.

Also Read:பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மறக்க முடியாத 6 ஃபேமிலி என்ட்ரிகள்.. ஒரே அறையில் ஃபேமஸான பிரதீப்

இந்த வாரம் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. பத்து போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலையை மூன்று பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக இந்த வாரம் மக்கள் சரியான நபரை தேர்ந்தெடுத்து வெளியில் அனுப்புவார்கள் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த நாமினேஷனில் மாயா மற்றும் பூர்ணிமா இல்லாதது வருத்தமாக தான் இருக்கிறது.

நாமினேட் ஆன மூணு போட்டியாளர்கள்

ஐந்து வாக்குகள் பெற்ற ரவீனா, நான்கு வாக்குகள் பெற்ற சரவணன் விக்ரம், மூன்று வாக்குகள் பெற்ற விசித்ரா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரவீனா மற்றும் சரவண விக்ரமை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த வாரம் விசித்ரா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. மேலும் அவர் இறுதிப் போட்டி வரை வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

சரவண விக்ரம் வீட்டிற்குள் எதுவுமே செய்யாமல், மாயா கூட்டணியின் ஆதரவில் இருந்து வருகிறார். இவர் மற்ற வேறு போட்டியாளர்களுடன் நாமினேட் செய்யப்பட்டு இருந்தால் கூட வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இவர் நாமினேட் செய்யப்பட்டு இருப்பது ரவீனா உடன் என்பதால் கண்டிப்பாக இந்த முறையும் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து சொதப்பி வருவது ரவீனா தான். மற்ற டம்மி பீசுகளுடன் டாமினேட் செய்யப்பட்டதால் தான் இவ்வளவு நாள் பிழைத்துக் கொண்டிருந்தார். மேலும் மக்களுக்கு கடந்த சில வாரங்களாக மணியை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ரவீனா வெளியே போனால் மணி நன்றாக விளையாடுவார் என்பது ஒரு பக்கம், அவர் வெளியே போய்விட்டால் நாரதர் வேலை வீட்டிற்குள் குறையும் என்பதாலும் அந்த சூனிய பொம்மையை தான் இந்த வாரம் வெளியே அனுப்புவார்கள்.

Also Read:அடுத்த 4 வாரம் பிக்பாஸில் இதுதான் சம்பவம்.. அதிக பணத்தை வெல்லும் போட்டியாளர் இவர் தான்

Trending News