Bigg Boss 8: என்ன சொல்றீங்க, அம்புட்டும் ஸ்கிரிப்டா, அதுவும் முத்துக்குமரனே சொல்லிட்டா எப்படி. என்ன டாஸ்க், யாரு டைட்டில் வின்னர் என்று எல்லாமே சொல்லி தான் உள்ளே கூட்டிட்டு வருவாங்க போல.
என்னதான் பயங்கர உஷாராக நடித்தாலும், சில நேரங்களில் கேமராவை மறந்து போட்டியாளர்கள் உளறி கொட்டுவது உண்டு.
அப்படி ஒரு விஷயத்தை தான் முத்துக்குமரன் செய்திருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் மணி டாஸ்க் வித்தியாசமாக வைக்கப்பட்டது.
குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பணப்பெட்டியை குறிப்பிட்ட வினாடிகளில் எடுத்துக் கொண்டு உள்ளே வர வேண்டும்.
ஓட்டு போடுறவங்க எல்லாம் முட்டாளா சாமி!
இதில் ஜாக்லின் இரண்டு வினாடிகள் வித்தியாசத்தில் முடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த டாஸ்க் பற்றி முத்துக்குமரன் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
அதாவது டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே முத்துக்குமரன் பணப்பெட்டி மெயின் டோருக்கு முன்னாடி பாதை வரைந்து வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்.
அதே மாதிரி ராயன் இந்த பக்கம் ஓட கூடாது வழுக்கி விழுந்து விடுவோம் என்று சொல்கிறார்.
அதற்கு முத்துக்குமரன் இங்கெல்லாம் ஓட சொல்ல மாட்டாங்க மெயின் டோரை தாண்டி தான் ஓடணும் என்று சொல்கிறார்.
அதே மாதிரி பிளாஸ்மா டிவியில் ஓடுபாதை காட்டப்படுகிறது. அப்போது முத்துக்குமரன் நான்தான் சொன்னேன்ல என்று உளறிக் கொட்டி விடுகிறார்.
இப்படி டாஸ்க் முதற்கொண்டு தெரிந்து கொண்டுதான் போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள். அப்படி என்றால் மக்களை எதற்காக ஓட்டு போட சொல்ல வேண்டும் என தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.