திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பீஸ்ட் பட சொதப்பலுக்கு இதுதான் காரணம்.. நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறிய எஸ்ஏசி

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் ரிலீசான பின்பு எதிர்பார்த்த அளவு இல்லை என விஜய் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும் விஜய் என்ற ஒருவருக்காக மட்டுமே இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது. சொல்லப்போனால் அவருக்காக மட்டுமே கோடான கோடி ரசிகர்களும் இந்த படத்தை தற்போது கண்டுகளித்து வருகின்றனர்.

இதனால் இந்த திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி படம் வெளியாகி ஐந்து நாட்களுக்கு உள்ளாகவே 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தைப் பற்றிய தன்னுடைய வெளிப்படையான கருத்தை விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது ஒரு சில இயக்குனர்களுக்கு ஆரம்ப படம் நன்றாக ஓடி விட்டால் உடனே அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வெகு சுலபமாக கிடைத்து விடுகின்றது. அதனால் அவர்கள் என்ன மாதிரியான படத்தை இயக்கினாலும் அது சம்பந்தப்பட்ட அந்த நடிகருக்காகவே நன்றாக ஓடி கோடிக்கணக்கில் வசூல் செய்து விடும் என்று அலட்சியமாக கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் இந்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பீஸ்ட் திரைப்படம் வெளியான நாள் முதலிலிருந்தே படம் நன்றாக இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது சந்திரசேகர் கூறியிருப்பதை வைத்து பார்க்கும் போது அவரும் கதை நன்றாக இல்லை விஜய்க்காக மட்டுமே இந்த படம் ஓடுகிறது என்று மறைமுகமாக தெரிவிப்பது போல் இருக்கிறது. அவரின் இந்த கருத்து தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News