வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் படத்தால் கடுப்பான பிரபல நடிகை.. வயிற்றெரிச்சலில் புலம்பித் தவிக்கும் அவலம்

அழகான முகம்,கவர்ச்சியான உடல், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பு ,ரசிகர்களை கிறங்கடிக்கும் நடனம் என தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகை நயன்தாரா, 37 வயது ஆகியும் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து இருக்காங்க.

சினிமால வந்து 19 வருஷம் ஆகுற நிலையில் இன்னைக்கும் நயன்தாரா தன்னுடைய அழகிலும் சரி, நடிப்பிலும் சரி குறையே வைத்தது கிடையாது. நடிகர் சரத்குமார் நடிப்பில் 2005ல் வெளியான ஐயா படம் மூலமாக நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நயன்தாராவின் இரண்டாவது படமே அதிர்ஷ்டவசமாக சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க. இப்படி தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்த நயன்தாராவுக்கு போட்டியா நடிகை பூஜா ஹெக்டே தமிழ் களம் இறங்கிற்காங்க, இதனால நடிகை நயன்தாரா செம காண்டுல இருக்காங்களாம்.

சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலமா சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் வசப்பட்டு இருந்தாங்க. இந்த நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி ரெண்டுபேரும் பிரிஞ்சிட்டாங்க. அதுக்கப்புறமா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்திருந்த நயன்தாரா, தமிழ் சினிமாவை விட்டு கொஞ்ச வருஷம் ஒதுங்கியும் இருந்தாங்க. அப்போதுதான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் தான் நடிகை நயன்தாராவுக்கு போட்டி யாருமே இல்லன்னு எல்லாருமே சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இப்போ லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக களம் இறங்கி இருக்காங்க நடிகை பூஜா ஹெக்டே. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நடிகை பூஜா ஹெக்டே உடைய கிளாமரான நடிப்பும் அவர்களுடைய நடனமும் ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணியது.

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சினிமா விமர்சகர்கள் சினிமாத்துறையில் இருக்குற எல்லோரையும் பூஜா ஹெக்டே உடைய புகழ் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்துல இடம்பெற்ற ஹலமதி ஹபிபு பாடலில் விஜய்யோடு ஜோடி சேர்ந்து பூஜா ஹெக்டே ஆடிய நடனமும், கவர்ச்சியான உடை அலங்காரமும் தான் தற்போது ரசிகர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறது. விஜயோட நடனத்துக்கு சமமா பூஜா ஹெக்டே இரண்டு பாடல்களிலும் ஆடிருக்காங்க.

அதுமட்டுமில்லாம பீஸ்ட் படத்தில் விஜயை காதலிக்கும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நடனம், நடிப்பு, கவர்ச்சியான தோற்றம் என இன்றுவரை ரசிகர்களை கிறங்கடித்து இருந்த நயன்தாராவை தற்போது பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் மூலமாக தோற்கடித்துள்ளார். இதனால் நயன்தாரா சற்று வயித்தெரிச்சலுடன் காணப்படுவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரும் பல தமிழ் திரைப்படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News