புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஜய்யின் பீஸ்ட் எப்படி இருக்கு? நெல்சன் தப்பித்தாரா.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி களைகட்டி வருகிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இதனால் தியேட்டர்கள் ரசிகர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடி வருகிறது.

தற்போது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் இப்படம் குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று பல கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது.

beast-twitter-review-1
beast-twitter-review-1

இயக்குனர் நெல்சனின் முந்தைய திரைப்படங்கள் காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கும். அந்த வகையில் ஒரு சிலர் இந்த படத்தின் காமெடி காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இப்படத்திற்கு அந்த காமெடி காட்சிகள்தான் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

beast-twitter-review-5
beast-twitter-review-5

மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள பல பிரம்மாண்ட காட்சிகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது அந்த வகையில் இப்படத்திற்கான ஆர்ட் டைரக்டர் கிரணை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் ட்ரைலரில் நாம் பார்த்த அந்த மால் சம்பந்தப்பட்ட காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

beast-twitter-review
beast-twitter-review

இதற்காக சிறப்பான வகையில் போடப்பட்ட செட் மற்றும் இதர வேலைகள் அனைத்தும் தற்போது பாராட்டை பெற்று வருகிறது. அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்துக்கு விஜய்யின் நடிப்பும், அனிருத்தின் இசையும் பக்கபலமாக இருக்கிறது. ஒரு ரசிகர் விஜய் இந்த திரைப்படத்தில் தன் முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும் என்று நிறைய நினைத்துள்ளார் ஆனால் அவருடைய இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்றும் படத்தின் கதை எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

beast-twitter-review
beast-twitter-review

ஆனால் அவர்கள் கூறுவது போல படம் மோசமாக இல்லை என்ற கருத்தும் வெளியாகி வருகிறது. மேலும் இப்படம் குறித்து ரசிகர்கள் ஏன் எதிர்மறை விமர்சனங்களை கொடுக்கின்றனர் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் இப்படம் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கிறது.

beast-twitter-review
beast-twitter-review

Trending News