புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அந்த 2 நிமிட காட்சியை நீக்கியதால்.. என் மீதான மரியாதையே போச்சு, தேவா வேதனை

சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில் 1992 ல் வெளியான படம் சூரியன். இதில், ரோஜா, கவுண்டமணி, பாபு ஆண்டனி, மனோரமா, ஓமக்குச்சி நரசிம்மன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இதில், ஷங்கர் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருந்தார்.

இப்படம் அக்காலத்தில் அதிகப் பொருட்செலவில் உருவாகி, சரத்குமாரின் கேரியரில் அதிக நாட்கள் ஓடியதுடன், அதிக வசூல் சாதனையும் படைத்தது என கூறப்படுகிறது.

இப்படம் தெலுங்கில் மண்டே சூர்யுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, அங்கும் ஹிட்டானது. இதில், சரத்குமார் இண்டலிஜென்ஸ் போலீஸ் அதிகாரியாக, மொட்டையடித்து, தலைமறைவாக காட்டிற்குள் உள்ள வீட்டுக்கு வருகிறார்.

அவரை அனாதை என்று நினைத்து, மனோரமா அவருக்கு அடைக்களம் கொடுத்து உதவுகிறார். ஒரு பணக்காரர் வீட்டில் கார் டிரைவராக பணியில் இருக்கும் சரத்குமார் மீது ரோஜாவுக்கு காதல் வரும். இருவரும் திருமணம் செய்து கொள்வர்.

முதலிரவு பாடலுக்கு மெட்டுப் போட்டதால் தேவா – பின்னால் வந்த வேதனை!

இருவருக்கும் முதலிரவு நடக்கும் சமயத்தில், சரத்குமாரிடம் ’’என்னைய்யா திண்ணயில உட்கர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்கிற. உள்ள நான் பாடுகிறேன்” என்று ரோஜா பேசுவார்.

இந்த சூழலுக்கு ஒரு பாடலை தேவா, ‘பதினெட்டு வயது இளமொட்டு மனசு ’ என்று அழகான பாடல் போட்டிருப்பார்.
இது, கந்த சஷ்டி கவசத்தில் உள்ள மெட்டு என அப்போது முதல் இப்போது வரை தேவாவை விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தேவா, “கந்த சஷ்டி கவசத்தில் 2 வரிகளை பாட்டில் வைத்து இசையமைக்க வேண்டும் என முதலில் என்னிடம் கேட்டனர். அதே ராகத்தில் மெட்டுப் போட்டு, பாடலும் கொடுத்துவிட்டு, அவர்கள் சொன்ன மாதிரி இசையையும் மாற்றிவிட்டேன்.

ஆனால் பட ரிலீசின் போது, படத்தின் நீளம் அதிகம் எனக் கூறி, ரோஜா, சரத்குமாரின் பேசும் அந்த வசனத்தை கட் செய்து விட்டனர். அதனால், இந்த இடத்தில் ஏன் கந்த சஷ்டி கவசம் ராகத்தில் பாடல் வருகிறது என பேச ஆரம்பித்துவிட்டனர்.

பக்தி பாடலை இப்படி யூஸ் பன்ணிட்டீங்களேன்னு எல்லோரும் என்னை திட்டினர். அந்த ரெண்டு நிமிட காட்சி கட் செய்ததால் என் மரியாதை போச்சு” என வேதனையுடன் தெரிவித்தார்.

Trending News