Saranya Ponvannan: சினிமாவை பொறுத்த வரைக்கும் கதாநாயகிகள் என்றாலே காதல் காட்சிகளுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த காலத்திலேயே, ஒரு சில நடிகைகள் தங்களுக்கான அடையாளத்தை சிறந்த நடிப்பின் மூலம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் இந்த ஐந்து நடிகைகள் இவர்களுடைய சிறந்த நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறார்கள்.
ஊர்வசி: முந்தானை முடிச்சு பரிமளம் ஆக ரசிகர்களுக்கு அறிமுகமாகி, இயக்குனர் பிரியதர்சானின் அப்பத்தா வரை நம் மனதில் சிறந்த நடிப்பின் மூலம் நிலைத்து நிற்கும் ஊர்வசி, காதல், காமெடி, சென்டிமென்ட் என அத்தனையிலும் பட்டையை கிளப்பக் கூடியவர். இவருடன் ஒரு காட்சியில் நடிப்பதற்கு உலக நாயகன் கமலஹாசனே திணறும் வகையில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து விடுவார்.
Also Read:கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்.. 25 கோடியை ஆட்டையை போட்ட கும்பல்
ரம்யா கிருஷ்ணன்: தமிழ் சினிமாவில் அதிகமான பிளாப் படங்களை கொடுத்த ஹீரோயின் என்றால் அது நான் தான் என வெளிப்படையாகவே ரம்யா கிருஷ்ணன் கூறி இருக்கிறார். அவருக்கு அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில நல்ல கேரக்டர்களை சிறப்பாக நடித்து நீலாம்பரியாகவும், மேகியாகவும், ராஜ மாதாவாகவும் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு செய்திருக்கிறார்.
சரிதா: ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து, நடிப்பு திறமை இருந்தாலே போதும் என்பதை நிரூபித்தவர் தான் சரிதா. கதாநாயகியாக மட்டுமில்லாமல், பின்னணி குரல் கொடுப்பவர் ஆகவும் சரிதான் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்.
Also Read:வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத 7 நடிகைகள்.. மேகியாக வலம் வரும் ஜெயிலர் பொண்டாட்டி
விஜி சந்திரசேகர்: 90 களின் காலகட்டத்தில் தங்கை மற்றும் காமெடி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த விஜி சந்திரசேகர், இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். விஜி நடிப்பில் மதயானை கூட்டம் திரைப்படம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
சரண்யா பொன்வண்ணன்: முதல் படமே கமலஹாசனுக்கு கதாநாயகியாக அமைந்தாலும், சரண்யா பொன்வண்ணனுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தான் வெற்றியை கொடுத்தது. இன்று சரண்யா அம்மாவாக நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லிவிடலாம். ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் காமெடி, செண்டிமெண்ட் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடிக்கிறார்.
Also Read:24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்