புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2023-ல் மிரட்டிய 6 சைக்கோ வில்லன்கள்.. சாக்லேட் காபி கேட்டு தளபதியை அலறவிட்ட சாண்டி மாஸ்டர்

5 Psycho villians: முன்பெல்லாம் சினிமா ரசிகர்கள் திரைக்கதையில் தான் வித்தியாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது படத்தில் நடிக்கும் வில்லன் கேரக்டரில் கூட வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரே மாதிரியான வில்லனிசம் காட்டாமல், தன்னை தனித்துவமாக காட்டுபவர்கள் தான் ஜெயிக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியான படங்களில் இந்த ஐந்து வில்லன்கள் மக்கள் மனதில் நின்று இருக்கிறார்கள்.

மிரட்டி விட்ட சைக்கோ வில்லன்கள்

சாண்டி மாஸ்டர்: நடனத்தோடு நகைச்சுவையை கலந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சாண்டி மாஸ்டர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே வந்து போயிருந்தாலும் சாண்டி மிரட்டி இருந்தார். தளபதி விஜயிடம் சாக்லேட் காபி கேட்கும் காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பி இருந்தார்.

தர்ஷன்: இந்த வருடம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் சித்தா. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த தர்ஷன் உண்மையிலேயே தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸை மிரள விட்டிருந்தார். சின்ன குழந்தைகளை தவறாக பயன்படுத்திவிட்டு, பின்னர் கொலை செய்யும் கொடூர சைக்கோ வில்லனாக தன்னுடைய முகத்தை காட்டி நடிப்பில் ஜெயித்து விட்டார்.

Also Read:2023 ஆம் ஆண்டு ஜொலித்த 3 பிக் பாஸ் ஹீரோக்கள்.. டாடாவால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

சுனில் சுகதா: மலையாள உலகில் பிரபல நடிகராக இருந்த சுனில் சுகதா தமிழில் அறிமுகமான படம் தான் போர் தொழில். கடந்த கால வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை பெற்றவர்கள் எப்படி சைக்கோ கில்லர் ஆக மாறுகிறார்கள் என்பதை இந்த படம் விளக்கி இருந்தது. சரத் பாபு இதில் மெயின் வில்லனாக நடித்திருந்தால். சுனில் முத்து செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.:

மிஸ்கின்: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்திருந்தது. மிஸ்கின் இந்த படத்தில் அரசியல்வாதியாக மிரட்டி இருந்தார். அதே போன்று சமீபத்தில் ரிலீசான லியோ படத்தில் ஒரு சில காட்சிகளில் வில்லனாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ராகுல் போஸ்: ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான சைக்கோ கில்லர் படம் தான் இறைவன். இந்த படத்தில் ஸ்மைல் கில்லர் என்று அழைக்கப்படும் பிரம்மா கேரக்டரில் ராகுல் போஸ் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். அதைவிட கொடூர சைக்கோவில்லனாக இந்த படத்தில் நடித்தார்.

கிச்சா ரவி: ஒரு சில வருடங்களாக மார்க்கெட்டி இல்லாமல் இருந்த விமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது விலங்கு படம். இந்த படத்தில் ரவி என்பவர் வில்லனாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே 2017ல் வெளியான புரூஸ்லி படத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் நடித்த கிச்சா என்னும் கேரக்டரின் மூலம் தான் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் 2022 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தாலும் இன்று வரை இந்த கிச்சா ரவியை யாராலும் மறக்க முடியாது.

சைக்கோ வில்லன்கள்

5 villians
5 villians

Also Read:2023ல் மாஸ் காட்டிய டாப் 5 சேனல்கள்.. முதல் இடத்திற்கு கடும் போட்டி போட்ட சன், விஜய் டிவி

 

 

Trending News