தமிழ் சினிமாவில் வெவ்வேறு அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல் நிறைய திகில் படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வாறு நம்மை பயத்தில் ஆழ்த்தி வெளியான சிறந்த 6 திகில் திரைப்படங்களைப் பார்க்கலாம்.
யாவரும் நலம் : விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன், நீத்து சந்திரா ஆகியோர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யாவரும் நலம். இப்படத்தில் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13b என்கிற பிளாக்கை விலைக்கு வாங்கி குடியேறுகிறார் மாதவன். பின்பு அவ்வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களே யாவரும் நலம் படத்தின் கதை.
முனி : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண், ராகவா லாரன்ஸ், சரத்குமார், கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் உருவான திகில் படம் முனி. பேய் என்ற வார்த்தை கேட்டாலே அஞ்சி நடுங்கும் இளைஞனுக்கு பேய் பிடிக்கிறது. இப்படத்தின் தொடக்கத்தில் நகைச்சுவையாக ஆரம்பித்தாலும் போகப்போக ரசிகர்களை வியக்கச் செய்தது.
டிமான்டி காலனி : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. சென்னையில் உள்ள மிகவும் பேய்கள் நிறைந்த இடங்களில் ஒன்று டிமான்டி காலனி. அந்தக் காலனிக்கு வந்து செல்லும் நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் மர்மம் நிறைந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது. டிமான்டி காலனி படம் ரசிகர்களை அஞ்சி நடுங்கச் செய்தது.
மாயா : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாயா. இப்படத்தில் நயன்தாரா வளர்ந்து வரும் நடிகை அப்சராவாகவும், மாயா என்ற பேயாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பேய் படங்களில் சற்று வித்தியாசமான முயற்சியால் ரசிகர்களை திகிலடையச் செய்த படம் மாயா.
டார்லிங் : சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டார்லிங். தன் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய 4 பேர் தற்கொலை செய்து கொள்ள ஒரு வீட்டுக்கு செல்லும்போது அங்கு பேயிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே டார்லிங் படம்.
லிப்ட் : வினித் வரப்பிரசாதி இயக்கத்தில் பிக் பாஸ் கவின், அமிர்தா ஐயர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லிப்ட். இப்படத்தில் ஒன்பது மாடி கொண்ட ஒரு ஐடி நிறுவனத்தில் உள்ள லிப்ட்டில் மாட்டிக்கொண்ட இருவருக்கும் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை லிப்ட். இப்படம் இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது.