வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சரத்பாபு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 6 படங்கள்.. ரஜினியுடன் மல்லுக்கட்டிய அசோக்கை மறக்க முடியுமா!

சரத் பாபு சினிமாவிற்கு நுழைந்து 80, 90களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இப்பொழுதும் இவரது பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக அமைந்து வருகிறது. தற்போது இவருடைய நடிப்பில் வெளிவந்த பெஸ்ட் 6 படங்களை பற்றி பார்க்கலாம்.

வேலைக்காரன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வேலைக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, சரத் பாபு, பல்லவி, அமலா, கே ஆர் விஜயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சரத் பாபுக்கு வரும் ஆபத்தை தடுக்கும் விதமாக ரஜினி எதிராலிடம் கொடுக்கும் சபதத்தை நிறைவேற்றும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இப்படத்தில் சரத் பாபு ராஜகுமாரி என்ற கேரக்டரில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ஓனராக நடித்திருப்பார்.

அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, குஷ்பூ, சரத் பாபு மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்தார்கள். இதில் ரஜினி அண்ணாமலை கேரக்டரிலும், சரத் பாபு அசோக் என்ற கேரக்டரில் 5 ஸ்டார் ஹோட்டலின் உரிமையாளராக நடித்திருப்பார்கள். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் சரத் பாபுவிடம் உன்னை விட நான் பெரிய ஆளாக வருவேன் என்று சபதம் விட்டு ஜெயிப்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இதில் சரத்பாபுவின் கேரக்டர் பார்க்கும்பொழுது நிஜமாகவே ரஜினியுடன் நெருங்கிய நண்பர் போல் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார்.

Also read: வெற்றி படங்களை மிஸ் பண்ணிய 7 நடிகைகள்.. அலைபாயுதே படத்தில் நடிக்க வேண்டியது இந்த ஹீரோயினா!

முத்து: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு முத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மீனா, சரத்பாபு, ராதாரவி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளி என்ற கேரக்டரில் சரத் பாபு நடித்தார். அத்துடன் ரஜினிக்கு இணையாக கதாபாத்திரமும் இவருக்கு கிடைத்ததால் அதிக பாராட்டுக்களும், வரவேற்பும் இந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது. இப்படம் வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு ஹிட் படமானது.

நிழல் நிஜமாகிறது: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு நிழல் நிஜமாகிறது திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சுமித்ரா, சோபா, சரத்பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமலின் நெருங்கிய நண்பராக சரத்பாபு நடித்தார். அத்துடன் இவருடைய தங்கை திருமணத்தின் மீது நாட்டம் இல்லாதது தெரிந்து கொண்டு அவள் மனதை மாற்றும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். இப்படம் சரத் பாப்புக்கு சினிமா கேரியரில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தது.

Also read: அடுத்தடுத்து திரை உலக மரணங்களா.? சரத்பாபு இறந்ததாக கிளம்பிய புரளி, ஷாக் ஆனா ரஜினி

நெஞ்சத்தை கிள்ளாதே: மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் வெளிவந்தது. இதில் சுகாசினி, சரத்பாபு, பிரதாப் மற்றும் மோகன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சரத்பாபு மீது சந்தேகப்படும் அவரது மனைவியை வைத்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளை முன்னெடுத்துச் சொல்லும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். இப்படம் சரத்பாபுவுக்கு சினிமாவில் ஒரு நல்ல பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தது.

முள்ளும் மலரும்: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, சரத்பாபு, ஜெயலட்சுமி, சோபனா மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ரஜினிகாந்துக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ அதே மாதிரி சரத் பாபு அனைவரும் தெரிந்து கொண்ட படமாக இப்படம் அவருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் இவர் ஜிப்பில் ஏறிக்கொண்டு பாடிய “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” பாடல் இன்னும் வரை எல்லாருடைய மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Also read: அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

Trending News