Rachitha: சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். இருந்தாலும் இவருக்கு தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது.
தற்போது இவர் நடித்து இருக்கும் பயர் படத்தின் ஒரு பாடல் காட்சியால் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி இன்று வரை அவர் பெயர் சொல்ல நின்று பேசும் ஆறு கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.
பிரிவோம் சந்திப்போம்: ரட்சிதாவை தமிழ் சீரியல் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம்.
இந்த சீரியல் முழுக்க கருப்பு கலர் மேக்கப் போட்டு நடித்திருப்பார். இவர் ஏற்ற நடித்த ஜோதி என்ற கேரக்டர் அப்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
சரவணன் மீனாட்சி: சரவணன் மீனாட்சி சீரியல் மீனாட்சி கேரக்டரில் நடித்த ஸ்ரீஜாவையே மறக்க செய்தார் இரண்டாவது சீசனில் வந்த ரட்சிதா.
வேட்டையன் மற்றும் மீனாட்சி கெமிஸ்ட்ரி அப்போது பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
நாச்சியார்புரம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாச்சியார்புரம் சீரியலிலும் ரட்சிதா ஜோதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதில் அவருடைய முன்னாள் கணவர் தினேஷுக்கு ஜோடியாகவே நடித்திருந்தார்.
நாம் இருவர் நமக்கு இருவர் 2: விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனில் ரட்சிதா மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
வேட்டையன் மீனாட்சி கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது அதே அளவுக்கு மாயன் மகா கெமிஸ்ட்ரியும் கொண்டாடப்பட்டது.
இளவரசி: சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி சீரியலில் ரட்சிதா மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
சீரியல் முழுக்க போலீஸ் ஆபீஸர் கேரக்டரில் நடித்த இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.