புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

சீரியல் ரசிகர்களால் மறக்கவே முடியாத 6 மாமியார் கேரக்டர்கள்.. அத்தனை பேரையும் அல்வா போல் தூக்கி சாப்பிட்ட மெட்டிஒலி ராஜம்

Serial: சீரியல் வரலாற்றை எடுத்துக் கொண்டார் நல்ல மாமியார் கதை அம்சத்தை கொண்டு வந்த சீரியல்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வில்லத்தனத்தை காட்டினால் தான் அது சீரியல் மாமியார் என்பது எழுதப்படாத விதி.

அந்த கேரக்டரை சிறப்பாக பண்ணி இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஆறு மாமியார் கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

6 மாமியார் கேரக்டர்கள்

சாந்தி வில்லியம்ஸ்: இதுவரை வந்த சீரியல்களாக இருக்கட்டும், இனி வரப்போகும் சீரியல்களாக இருக்கட்டும் மெட்டிஒலி ராஜம் கேரக்டர் கிட்ட கூட யாராலும் வர முடியாது.

மகனை பாசத்தால் கட்டி போடுவது, மருமகளையும் அவள் வீட்டாரையும் துச்சம் என பேசுவது என ராஜம் ரியல் மாமியாராகவே வாழ்ந்திருப்பார்.

அந்த காலகட்டத்தில் இவரை வசைபாடாத ஆட்களை இல்லை என்று சொல்லலாம்.

நளினி: மெட்டிஒலி ராஜம் கேரக்டருக்கு இணையான வில்லத்தனத்தை செய்தவர் தான் கோலங்கள் அலமேலு.

பணத்தை மையமாக வைத்து அபியை தன்னுடைய மகன் பாஸ்கர் எனக்கு திருமணம் செய்து வைப்பது.

எந்த அளவுக்கு மருமகளை டார்ச்சர் செய்ய முடியுமா அந்த அளவுக்கு டார்ச்சர் செய்வது என நளினி அலமேலுவாகவே வாழ்ந்திருப்பார்.

கௌதமி வேம்புநாதன்: இவரை இன்று வரை பாக்கியம் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு திருமதி செல்வம் சீரியலில் அந்த கேரக்டர் ஆகவே வாழ்ந்திருப்பார்.

செல்வத்தை பாசத்தால் கட்டி வைத்திருப்பது, ஒரு கட்டத்தில் தன் மகனுக்கு பிரச்சனை என வரும் பொழுது செல்வத்தை தூக்கி எறிவது, அர்ச்சனாவுக்கு செய்யும் கொடுமைகள், நந்தினியுடன் துணை போவது என வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார்.

பிரவீனா: ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமி என்னும் கேரக்டரில் நடித்தவர் தான் பிரவீனா. மகள்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என்ற பெயரில் மொத்த வில்லத்தனத்தையும் இறக்கி இருப்பார்.

அதன் பின்னர் மருமகளின் கனவை புரிந்து கொண்டு ஆதரவு கொடுப்பதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சரவணன் மீனாட்சி: நடிகை குயிலி சரவணன் மீனாட்சி சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு அம்மாவாக நடித்திருப்பார். இவரை ரொம்ப வில்லத்தனமான அம்மா என்று எல்லாம் சொல்லி விட முடியாது.

ஆனால் எந்த இடத்தில் மீனாட்சி மற்றும் அவளுடைய குடும்பத்தை வச்சு செய்ய வேண்டுமோ அதை நாசுக்காக செய்து முடிப்பதில் கில்லாடி.

சிறகடிக்க ஆசை: இப்போதைக்கு ரொம்ப சென்சேஷனலாக போய்க் கொண்டிருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை.

இதில் விஜயா கேரக்டரில் நடிக்கும் அணிலா ஸ்ரீகுமார் நடித்து கொண்டிருக்கிறார்.

மாமியார் என்பதால் மொத்த வில்லத்தனத்தையும் கொட்டி விடாமல் காமெடியிலும் பட்டயைக் கிளப்பில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Trending News