Top 7 movies of 2023: இந்த வருடத்தில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு நிறைய பீல் குட் படங்கள் ரிலீஸ் ஆகின. சின்ன பட்ஜெட்டில் படம் பண்ணி பெரிய லாபத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து இருக்கிறார்கள். அதிலும் இந்த ஏழு புது முக இயக்குனர்கள் லோ பட்ஜெட்டில் படம் எடுத்ததோடு மக்கள் தலையில் தூக்கி கொண்டாடும் அளவிற்கான கதையையும் கொடுத்து இருக்கிறார்கள். அந்த ஏழு இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.
ஏழு சிறந்த புதுமுக இயக்குனர்கள்
டாடா: இந்த வருடத்தின் தொடக்கத்தையே கோலாகலமாக ஆக்கிய பெருமை டாடா படத்திற்கு தான் சேரும். இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நடிகர் கவினை வளர்ந்து வரும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்த்தது. துள்ளலான இளமை காதல், அப்பா மகன் பாசம், ஈகோ என மொத்தத்தையும் கண் முன் கொண்டு வந்தது.
குட் நைட்: தமிழ் சினிமாவில் மணிகண்டன் என்னும் பன்முகத் திறமை கொண்ட ஹீரோ வளர்ந்து வருகிறார் என்பதை அடையாளப்படுத்திய படம் குட் நைட். விநாயக் சந்திரசேகரன் இயக்குனராக அறிமுகமான படம் இது. கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன இந்த படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அயோத்தி: ஆர் மந்திரமூர்த்தி என்னும் புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்ட படம் அயோத்தி. சசிகுமார் நடிக்கும் இந்த படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. எதார்த்தமான கதை களத்திற்கு, பிரபலமான முகங்களோ அல்லது பிரம்மாண்ட தயாரிப்பு தேவையில்லை என்பதை நிரூபித்த படம் அயோத்தி.
டிடி ரிட்டர்ன்ஸ்: இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆன படம் டிடி ரிட்டன்ஸ். சந்தானம் இனி அவ்வளவுதான், அவருடைய சினிமா வெற்றி முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு பெரிய இடியாக அமைந்த படம் தான் இது. எதார்த்தமான காட்சிகளுடன் வயிறு குலுங்க வைக்கும் காமெடியால் குழந்தைகள் வரை இந்த படம் ரசிக்கப்பட்டது.
போர்த்தொழில்: சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் போர் தொழில். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது. ரிலீசாகி கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை தியேட்டரில் ஓடிய சாதனை இந்த படத்திற்கு உண்டு. லோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிவிட்டது.
ஜோ: அவ்வப்போது சினிமா ரசிகர்களுக்கு தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ட்ரீட் வைத்துக் கொண்டிருக்கிறார் ரியோ ராஜ். அறிமுக இயக்குனர் அருண் டி ஜோஸ் இயக்கத்தில் இந்த வருடத்தின் நல்லதொரு படமாக ரிலீஸ் ஆனது தான் ஜோ. காதல், திருமணம், ஏமாற்றம், பிரிவு என ஒரு ஆணின் வாழ்க்கையை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறது.
பார்க்கிங்: கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பெயிலியர் ஹீரோ என பெயர் எடுத்து விடக்கூடாது என்பதில் ஹரிஷ் கல்யாண் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். தனக்கான சரியான கதையை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் இந்த வருட இறுதியில் கொடுத்து இருக்கும் படம் தான் பார்க்கிங். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
Also Read:Joe Movie Review – காதலியின் மரணம், கட்டாய திருமணம்.. ரியோவின் ஜோ எப்படி இருக்கு?