காற்றோடு கரைந்து போன தாஜ்மகால் நாயகன்.. காலத்துக்கும் பேர் சொல்லும் முத்தான ஐந்து படங்கள்!

Manoj
Manoj

Manoj Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் தன்னுடைய 48 வது வயதில் மரணம் அடைந்திருக்கிறார்.

மரணம் என்பது உடலுக்கு மட்டும் தானே தவிர கலைக்கு கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக காலம் முழுக்க தன்னுடைய பெயரை சொல்ல மனோஜ் நடித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

முத்தான ஐந்து படங்கள்!

தாஜ் மகால்: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசை, அறிமுக நாயகனுக்கு இதைத் தாண்டி வேறு என்ன இருக்க முடியும்.

‘மானம் தானே வேட்டி சட்டை மத்ததெல்லாம் வாழமட்ட’ என்று கர்ஜித்த மனோஜ் முகம் யாராலும் மறக்க முடியாது.

அதே நேரத்தில் ‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்’ பாட்டில் காதலில் உருகிய மனோஜும் நம் மனதில் இருந்து அழியவே மாட்டார்.

வருஷமெல்லாம் வசந்தம்: 90ஸ் கிட்ஸ்களால் இன்று வரை கொண்டாடப்படும் படம் வருஷமெல்லாம் வசந்தம். காதலில் தோற்று, தாத்தாவின் செல்ல பேரனாக மாறும் ராஜாவை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இல்லை.

2002 ஆம் ஆண்டு ரிலீசான இந்த படத்தின் எங்கே அந்த வெண்ணிலா பாடல் இப்போது பெரிய அளவில் வைரலாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரம்: அண்ணன் தம்பி பாசத்திற்கு பேருக்கு போன சமுத்திரம் படத்தில் மனோஜ் சின்ராசு என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

சென்டிமென்ட் என்றது என்பதை தாண்டி இந்த படத்தில் மனோஜ் மற்றும் கவுண்டமணியின் காமெடி ட்ராக் ரசிக்கும் படி இருக்கும்.

அல்லி அர்ஜுனா: மனோஜ்க்கு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து விடும். அந்த வரிசையில் இணைந்தது தான் அல்லி அர்ஜுனா படம்.

இந்த படத்தில் இவர் அறிவழகன் கேரக்டரில் நடித்திருப்பார். தியேட்டரில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படம் இது.

அன்னக்கொடி: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அன்னக்கொடி. இந்த படத்தில் மனோஜ் சடையன் என்ற நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டி இருப்பார். அட இவருக்கு வில்லத்தனமும் பண்ண தெரியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கும் இந்த படம்.

Advertisement Amazon Prime Banner